Advertisment

’துப்புரவு பணியாளர்’ என விராட் கோலியை கேலி செய்த ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்: கொதித்தெழுந்த ஹர்பஜன்

விராட் கோலி துப்புரவு பணி செய்யும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து கேலி செய்த ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளருக்கு ஹர்பஜன் சிங் கண்டனங்களை தெரிவித்தார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
HARBHAJAN SINGH , VIRAT KOHLI ,dennis freedman, twitter

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தூய்மை இந்தியா திட்டத்துக்காக துப்புரவு பணி செய்யும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து கேலி செய்த ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளருக்கு ஹர்பஜன் சிங் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.

Advertisment

தூய்மை இந்தியா திட்டத்துக்காக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை விராட் கோலி சுத்தம் செய்யும் புகைப்படத்தை கடந்த 12-ஆம் தேதி ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் டென்னிஸ் ஃப்ரீட்மேன் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த பதிவில், “உலக லெவன் போட்டிக்காக துப்புரவு பணியாளர்கள் மைதானத்தை சுத்தம் செய்கிறார்கள்”, என குறிப்பிட்டிருந்தார்.

இதனை கண்டதும் விராட் கோலி ரசிகர்கள் ஆத்திரமடைந்து கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹர்பஜன் சிங்கும் அந்த பத்திரிக்கையாளருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். இதுகுறித்து ‘இந்தியா டுடே’ இணையத்தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ”இம்மாதிரி பத்திரிக்கையாளர் ஒருவர் கருத்து தெரிவித்ததை அவமானகரமானதாக உணர்கிறேன். விராட் கோலி அல்லது வேறு யார் குறித்து இப்படி எழுதினாலும் முட்டாள்தனமாக உள்ளது. நாம் அடுத்தவர்கள் மீதான மரியாதையை கடைபிடிக்க வேண்டும். மேலும், யார் குறித்து பேசுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். யாரையும் தரம் தாழ்ந்து பேசக்கூடாது. ஆஸ்திரேலியர்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் யாராக இருந்தாலும், நாம் மனிதர்கள். யாரையும் தரம் தாழ்ந்து பேசாமல் நாம் மனிதர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்”, என கூறினார்.

பத்திரிக்கையாளரின் இந்த கருத்துக்கு விராட் கோலி பதிலளிக்க வேண்டாம் எனவும், எந்தவித தாக்கத்திற்கும் அவர் உள்ளாக வேண்டாம் எனவும் ஹர்பஜன் சிங் கேட்டுக்கொண்டார்.

"விராட் கோலி இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் சாலையில் யானை செல்லும்போது அதை பார்த்து பல நாய்கள் குரைக்கத்தான் செய்யும். விராட் கோலி ஒரு யானை. அதனால், அவரை குறித்து இம்மாதிரியான ஆட்கள் சொல்லும் கருத்துகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் அவர்கள் விராட் கோலி போன்றிருக்க முடியாது. அவ்வளவுதான்”, எனவும் ஹர்பஜன் சிங் கூறினார்.

பல சர்ச்சைகளில் சிக்கினாலும் ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் டென்னிஸ் ஃப்ரீட்மேன் தன் சர்ச்சை கருத்துகளை நிறுத்தவில்லை. அவரின் சர்ச்சைக்குரிய பதிவுகளில் சில.

ஹர்பஜன் சிங்கையும் அவர் தன் ட்விட்டர் பதிவில் கேலி செய்துள்ளார்.

இந்தியர்களையும் கேலியாக பதிவிட்டுள்ளார்.

Twitter Virat Kohli Harbhajan Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment