Advertisment

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்!

தென் ஆப்ரிக்க ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக டு பிளெசிஸ் தேர்வு

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
South Africa, Faf du Plessis,

South Africa’s captain Faf du Plessis, celebrates a century during the second one-day international cricket match between South Africa and Australia, at Wanderers stadium in Johannesburg, South Africa, Sunday, Oct. 2, 2016. (AP Photo/Themba Hadebe)

தென் ஆப்ரிக்க ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், டெஸ்ட்,டி20 மற்றும் ஒருநாள் ஆகிய மூன்று அணிகளுக்கும் டு பிளெசிஸ் தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார். முன்னதாக சாம்பியன்ஸ் டிராபில் தென் ஆப்ரிக்க அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து, தென் ஆப்ரிக்க ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டிவிலியர்ஸ் சமீபத்தில் விலகுவதாக அறிவித்தார்.

அந்த சமயத்தில் டி விலியர்ஸ் கூறும்போது: கடந்த ஆறு ஆண்டுகளாக தென் ஆப்ரிக்க அணியை வழிநடத்தியது பெருமையாக கருதுகிறேன். டெஸ்ட் மற்றும் டி20 அணிகளுக்கு டு பிளெசிஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக யாரை தேர்வு செய்தாலும், அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தென் ஆப்ரிக்க ஒருநாள் அணியின் கேப்டனாக டு பிளெசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்வுக் குழுவின் பரிந்துரையின் படி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.

Faf Du Plessis South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment