Advertisment

புரோ கபடி லீக் : அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோத்தாஸ் அணிகள் வெற்றி

புரோ கபடியில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.

author-image
WebDesk
New Update
Bengaluru Bulls vs Haryana Steelers and UP Yoddhas vs Telugu Titans PKL 2023 updates in tamil

புரோ கபடி 2023: பெங்களூரு புல்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் உ.பி. யோத்தாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ்

Pro-kabaddi-league: 10-வது புரோ கபடி லீக் திருவிழா இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

Advertisment

நேற்றைய போட்டி முடிவுகள்

இந்த தொடரில் நேற்று (வெள்ளிக்கிழமை) 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இரவு 8 மணிக்கு நடந்த ஆட்டத்தில்  38-31 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை தபாங் டெல்லி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இரவு 9 மணிக்கு நடந்த ஆட்டத்தில் யு மும்பா அணியை 43-32 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணி வீழ்த்தியது. 

இன்றைய போட்டிகள் 

இந்நிலையில், இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் இரவு 8 மணிக்குநடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், ஹரியான ஸ்டீலர்ஸ் அணி 38-32 என்ற புள்ளி கணக்கில் பெங்களூர் புல்ஸ் அணியை வீழ்த்தியது. ஹரியானா அணியில் வினய் 8 புள்ளிகளும், தேசய் 7, ஜெய்தீப் 6 புள்ளிகள் எடுத்தனர். பெங்களூர் அணி தரப்பில் பரத் 14 புள்ளிகள் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதியது. பரபரப்பான இந்த போட்டியில் உ.பி. யோத்தாஸ் அணி 48-33 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. உ.பி அணியில் சுரீந்தர் கில் 14 புள்ளிகள் எடுத்தார். தெலுங்கு அணி சார்பில், பவன் 11 புள்ளிகள் பெற்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment