Advertisment

புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்த பெங்கால் வாரியர்ஸ்

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்கால் வாரியர்ஸ் 60-42 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்சை வீழ்த்தியது.

author-image
WebDesk
New Update
 Bengal Warriors vs Patna Pirates match updates for Pro Kabaddi League 2023 in tamil

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் vs பாட்னா பைரேட்ஸ் மோதல்

Pro-kabaddi-league: 10-வது புரோ கபடி லீக் திருவிழா இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

Advertisment

இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டது.

தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்கால் வாரியர்ஸ் 60-42 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்சை வீழ்த்தியது. பெங்கால் அணியில் கேப்டன் மனிந்தர் சிங் 15 புள்ளியும், நிதின் குமார் 14 புள்ளியும் எடுத்து அசத்தினர்

பெங்கால் வாரியர்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய 4 ஆட்டங்களில் 3இல் வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் ஒரு ஆட்டத்தை டிரா செய்தது. 

மறுபுறம் 3-வது ஆட்டத்தில் ஆடிய பாட்னா அணிக்கு இது முதல் தோல்வியாகும். அவர்கள் முந்தைய ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை 33-30 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment