Advertisment

புரோ கபடி லீக்: பெங்கால் - ஜெய்ப்பூர் ஆட்டம் டிரா; குஜராத்தை வீழ்த்தி பாட்னா வெற்றி!

புரோ கபடி லீக் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற்ற உள்ளன. இரவு 8 மணிக்கும் நடக்கும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதியது..

author-image
WebDesk
New Update
 Bengal Warriors vs Jaipur Pink Panthers and Gujarat Giants vs Patna Pirates PKL 2023 updates in tamil

புரோ கபடி லீக் 2023: பெங்கால் வாரியர்ஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்; குஜராத் ஜெயண்ட்ஸ் - பாட்னா பைரேட்ஸ் மோதல்

pro-kabaddi-league: பெங்கால் வாரியர்ஸ் மற்றும் ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் இடையே நடைபெற்ற ஆட்டத்தில், இரண்டு அணிகளுடம் கடுமையாக மோதின. ஆட்டத்தின் இறுதியில் இரண்டு அணிகளும் சரியாக 28 புள்ளிகளைப் பெற்றதால் வெற்றி தோல்வி இன்று டிராவில் முடிந்தது.

Advertisment

10-வது புரோ கபடி லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

இந்நிலையில், இந்த தொடருக்கான புதன்கிழமை இரவு 8 மணிக்கு நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 50-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரவு 9 மணிக்கு நடந்த 2-வது ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் அணி 57-27 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் இன்று (வியாழக்கிழமை) 2 போட்டிகள் நடைபெற்ற உள்ளன. இரவு 7 மணிக்கும் நடக்கும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதியது.

இதில், பெங்கால் வாரியர்ஸ் மற்றும் ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் இடையே நடைபெற்ற ஆட்டத்தில், இரண்டு அணிகளுடம் கடுமையாக மோதின. ஆட்டத்தின் இறுதியில் இரண்டு அணிகளும் சரியாக 28 புள்ளிகளைப் பெற்றதால் வெற்றி தோல்வி இன்று டிராவில் முடிந்தது.. 

குஜராத்தை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி

அகமதாபாத்தில்  குஜராத் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் இடையே வியாழக்கிழமை (டிச. 07) நடைபெற்ற கபடி போட்டியில், குஜராத்தை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.

10-வது புரோ கபடி லீக் திருவிழா ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற்ற பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது லீக் ஆட்டம் 28-28 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. 

இதைத் தொடர்ந்து, குஜராத் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் இடையே இரண்டாவது போட்டி நடைபெற்றது. குஜராத் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற கபடி போட்டியில், குஜராத்தை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 33-30 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment