Advertisment

4.5 கிலோ எடையை இழந்து ஆஸ்திரேலிய அணியை வெற்றிப் பெற வைத்த வீரர்!

இரண்டரை மணி நேரம் வெயிலில் நின்று விளையாடியதன் காரணமாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் எடையில் 4.5 கிலோ குறைந்துவிட்டது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
4.5 கிலோ எடையை இழந்து ஆஸ்திரேலிய அணியை வெற்றிப் பெற வைத்த வீரர்!

பொதுவாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் ஆசிய கண்டத்தில் விளையாடும்போது சுழற்பந்துக்கு மட்டுமல்ல, வெப்பத்தையும் தாங்க திணறுவார்கள். அந்நாட்டு பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட்டைக் கழட்டினால் லிட்டர் கணக்கில் வியர்வை கொட்டும். அந்த அளவிற்கு அவர்கள் வெயிலால் பாதிக்கப்படுவார்கள்.

Advertisment

இப்படியொரு சூழ்நிலையில், பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர், வெயில் காரணமாக அதிகமாக வியர்வை வெளியாகி, தனது உடல் எடையில் 4.5 கிலோ இழந்துள்ள சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. டாக்காவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டி ஒன்றில் வீழ்த்தி வரலாறு படைத்தது.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 305 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 377 ரன்கள் எடுத்தது. ஆஸி., தொடக்க வீரர் டேவிட் வார்னர் 123 ரன்கள் எடுத்தார். அவருக்கு பக்கபலமாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 82 ரன்கள் விளாசினார்.

2-வது நாள் ஆட்டத்தின் போது, ஸ்மித் அவுட்டானதும் ஹேண்ட்ஸ்கோம்ப் களம் இறங்கினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சுமார் இரண்டரை மணி நேரம் அவர் பேட்டிங் செய்தார். 144 பந்துகளை சந்தித்து 82 ரன்கள் சேர்த்து அணிக்கு உதவினார். வங்காள தேசத்தின் சுழற்பந்துகளை லாவகமாக சமாளித்த ஹேண்ட்ஸ்கோம்பால் வெப்பத்தை சமாளிக்க முடியவில்லை. அவரது உடல் வியர்வையால் நனைந்தது. அடிக்கடி ஐஸ் கட்டி பேக் வைத்து வெப்பத்தை தணிக்க முயற்சித்தார். இருந்தாலும் முடியவில்லை. இரண்டரை மணி நேரம் வெயிலில் நின்று விளையாடியதன் காரணமாக அவரது எடையில் 4.5 கிலோ குறைந்துவிட்டது.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் 72 ரன்கள் ஆஸி., முன்னிலை பெற்றது. பின் இரண்டாம் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேசம் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹீம் மட்டும் 31 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து 85 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, 71.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமன் ஆனது. வெளிநாட்டு மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு இது 144-வது டெஸ்ட் வெற்றியாகும்.

இந்த இரண்டாவது இன்னிங்ஸிலும், 4.5 கிலோ எடை இழந்த ஹேண்ட்ஸ்கோம்ப் 16 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

Steve Smith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment