Advertisment

இந்திய மண்ணில் நிகழ்த்தப்பட்ட ஐந்து முறியடிக்கப்படாத சாதனைகள்!

நமது தேசம், திறம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதைப் போல, பல அசைக்க முடியாத கிரிக்கெட் சாதனைகளையும் தன் வசம் கொண்டிருக்கிறது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்திய மண்ணில் நிகழ்த்தப்பட்ட ஐந்து முறியடிக்கப்படாத சாதனைகள்!

நம்மூரில் கோபத்தில் இருக்கும் ஒருவரை உடனே அமைதிப்படுத்த ஒரு எளிய வழி, 'இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நாளைக்கு ஒன்டே மேட்ச் இருக்கு' என்று சொன்னால் போதும். அந்தளவிற்கு கிரிக்கெட் என்பது நம் வாழ்க்கையில் ஒருசேர கலந்து உள்ளது. உணவு, தூக்கம், துக்கம், மகிழ்ச்சி போன்று கிரிக்கெட்டும் நமது வாழ்க்கை முறையில் தவிர்க்கமுடியாத அங்கம் எனலாம்.

Advertisment

கடந்த 85 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கு பாதி மக்கள் கிரிக்கெட்டை நேசிக்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் வளர ஆரம்பிக்கும் போது அது விளையாடும் முதல் விளையாட்டு கிரிக்கெட்டாகத் தான் இருக்கும். ஒரு பிளாஸ்டிக் பேட்டை வைத்துக் கொண்டு பந்தை அடிக்க முடியாமல் வீசிக் கொண்டு இருக்கும். இவ்வாறு பந்தை அடிக்க முயற்சி செய்து படிப்படியாக வளர்ந்தவர்கள் தான் சச்சின், சேவாக், திராவிட், கங்குலி போன்றவர்கள். இவர்களைத் தான் நம்மில் பலரும் நம்முடைய கிரிக்கெட் ரோல்மாடலாக கொண்டிருப்போம்.

நமது தேசம், திறம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதைப் போல, பல அசைக்க முடியாத கிரிக்கெட் சாதனைகளையும் தன் வசம் கொண்டிருக்கிறது. அவ்வாறு நிகழ்த்தப்பட்ட ஐந்து பெரும் சாதனைகள் குறித்த பட்டியலை இங்கே பார்ப்போம்.

1. ஒருநாளில் முதல் இரட்டைச் சதம் \ அதிக இரட்டை சதம்

https://www.youtube.com/embed/DqAl5JfGRWs

குவாலியரில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 200* ரன்கள் விளாசி, கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்று வரலாற்றுப் பக்கத்தில் 'எடிட்' செய்ய முடியாத சாதனையை தன் வசப்படுத்தினார்.

சச்சினைத் தொடர்ந்து இந்தூரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில், வீரேந்திர சேவாக் 219 ரன்கள் விளாசினார். பின்னர், இந்த அனைத்து சாதனைகளையும் தூக்கி சாப்பிடும் வகையில், ரோஹித் ஷர்மா இரண்டு இரட்டை சதங்களை விளாசினார். முதல் இரட்டை சதத்தை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெங்களூருவிலும், இரண்டாவது இரட்டை சதத்தை இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் அடித்தார்.

2. ஒரு நாள் போட்டியில் தனி நபர் அதிகபட்ச ஸ்கோர் (264)

https://www.youtube.com/embed/4rBobMW_EM4

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 2014-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி இந்திய தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனி நபராக 250 ரன்களுக்கும் மேலாக குவித்தார். அப்போட்டியில் மொத்தம் 264 ரன்களை குவித்து உலக அணிகளை மிரள வைத்தார். ஒருநாள் போட்டியில் இதுதான் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகும். அப்போட்டியில் இந்தியா 404 ரன்கள் விளாசியது. இலங்கை 251 ரன்களில் ஆல் அவுட்டானது.

3. அதிவேக டி20 சதம்

https://www.youtube.com/embed/vWavW9biNZ4

கிரிக்கெட் உலகின் 'அதிரடி சூரன்' என்று அழைக்கப்படும் கிரிஸ் கெயில், 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது, பெங்களூருவில் நடந்த புனே அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 30 பந்துகளில் சதம் அடித்தார். டி20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் இதுவாகும். இன்றுவரை இச்சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது.

4. டி20-ல் தனி நபர் அதிகபட்ச ஸ்கோர்

பெங்களூருவில் புனே அணிக்கு எதிராக நடந்த அதே போட்டியில் கிரிஸ் கெயில் 66 பந்துகளில் 175 ரன்கள் விளாசியது தான் டி20 போட்டியில் தனி நபர் அதிகபட்ச ஸ்கோராகும்.

5. டி20 அதிக ரன்கள் விளாசிய அணி

இதே போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கெயிலின் சூறாவளி ஆட்டம் காரணமாக 20 ஓவர்களில் 263 ரன்கள் குவித்தது. இறுதிக் கட்டத்தில் டி வில்லியர்ஸ் 8 பந்தில் 31 ரன்கள் விளாசினார். டி20 போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவே.

இருப்பினும், மூன்று வருடங்களுக்குப் பிறகு 2016-ஆம் ஆண்டு செப்.,6-ஆம் தேதி ஆஸ்திரேலிய அணி பல்லேகல்லேவில் நடந்த ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக இதே ஸ்கோரை எடுத்து இச்சாதனையை சமன் செய்தது.

India Vs Australia Rohit Sharma Kohli Chris Gayle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment