Advertisment

தேசிய நதிகள் இணைப்பு நடவடிக்கைகள் துவங்குகிறது. ரூ. 5.5 லட்சம் கோடி மதிப்பில் தயாராகும் திட்டம்.

நதிகள் இணைப்புக்காக கடந்த 30 வருடமாக போராடி வரும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நதி நீர் இணைப்புக்கான வரைவு திட்டம் தயாராகிவிட்டது என்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
narmatha river

வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

Advertisment

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நதிநீர் இணைப்பை குறித்து பிரதமருக்கு அளித்த கடிதம், அதற்கான பதில், உச்சநீதிமன்றத்தில் நதிநீர் இணைப்புக்காக 30 ஆண்டுகள் போராடியது குறித்தான பதிவுகள் எனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். மத்திய அரசு எனக்கு நான் அனுப்பிய கடிதத்தின் தாக்கீதின்படியே இதற்கான செயல்திட்டங்களின் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

நதிநீர் இணைப்பை குறித்து நான் வழக்கு தாக்கல் செய்த போது என்னை பரிகாசம் செய்தவர்கள் பலர். இப்போது பலர் நதிநீர் இணைப்பை குறித்து பேசுவது அன்றாட நடவடிக்கையாகிவிட்டது. ஏதோ வானம் பார்த்த கரிசல் பூமியில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து நதிநீர் இணைப்பு வேண்டுமென்று 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இதற்கான தரவுகளை சேகரித்து வழக்கு தொடுத்து வெற்றி கண்டது பலருக்கு தெரியுமா, தெரியாதா என்பது குறித்து அக்கறை இல்லை. என் மனசாட்சி அதை உணர்ந்து மகிழ்ச்சி கொள்கின்றது.

தூக்கு தண்டனை கூடாது என்று இன்றைக்கு பேசுவது வரவேற்கக்கூடிய நடவடிக்கை. ஆனால் உச்சநீதிமன்றத்திலும் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்த வீராபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுக்கு 3 நாட்களில் பாளையங்கோட்டை சிறையில் இருந்து அவர் அனுப்பிய மூன்று வரித் தந்தியை கொண்டு தூக்குக் கயிறை நிறுத்தியவன்.

தமிழக சட்ட மேலவை அமைய வேண்டுமென்று வழக்கு தொடுத்து உத்தரவு பெற்றும் அன்றைய மாநில அரசின் மெத்தனப் போக்கால் நிறைவேறாமல் போனது.

சுற்றுச்சூழலை பாதிக்கும் கூடங்குளம் கூடாதென்று இன்றைக்கு சொல்லவில்லை. 1989லேயே வழக்கினை தொடுத்தவன்.

இது மட்டுமா, 1975ல் விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கைகளையும் ரத்து செய்து, கடன் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் உத்தரவு பெற்றேன்.

கண்ணகி கோவில் தமிழ்நாட்டுக்கு சொந்தம், வீரப்பன் வழக்கிலிருந்து மாட்டிய தமிழர்களை மைசூரு சிலையில் இருந்து மீட்டது. காவிரி பிரச்சனை போன்ற வழக்குகளின் எண்ணிக்கை நீண்டு விடும். உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் இவ்வாறு பொது நலனுக்காக 42 வருடங்களில் தொடுத்த வழக்குகள் 20க்கும் மேலாக இருக்கும். மக்களுக்கு தொலைக்காட்சியும், பிக் பாஸும், ரைமிங்காக ஏற்ற இறக்க பேச்சுகளும், ஏமாற்று திருட்டு குற்றவாளி அரசியல்வாதிகளும் தான் கண்ணில் படுவார்கள். உழைத்தவர்கள் முதுகில் குத்தப்படுவார்கள், ஒதுக்கப்படுவார்கள், தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்கள். 

இதுதான், எழுதப்படாத இந்த மண்ணின் அநீதிகள். இருப்பினும் எவ்வளவு ரணங்களை ஏற்படுத்தினாலும் தொடர்ந்து எடுத்த நடவடிக்கைகளை தொய்வில்லாமல் செய்வது தான் உண்மையான களப்பணியாளன். இவர்களுடைய வாழ்த்துகளுக்காகவோ பதவி ஆசைகளிளோ இதெல்லாம் செய்யவில்லை. இதயசுத்தி என்ற நிலையில் மன திருப்திக்காக தனி மனிதனாக போராடுவதிலும் ஒரு சுகம் இருக்கிறது. அந்த வகையில் நதிநீர் இணைப்பு இன்றைக்கு நடைமுறைக்கு வரும் என்பதில் ஓரளவு நிறைவான செய்தியாக காதுகளுக்கு எட்டும்போது அணிலாக இருந்து அடிப்படை பணிகளை செய்தவன் என்ற நிலையில் மகிழ்ச்சியின் உச்சத்தில் தனிப்பட்ட முறையில் உள்ளேன் என்பதை சொல்வதில் ஒரு பெருமை உள்ளது. திரும்பவும் நதிநீர் இணைப்பு குறித்தான மத்திய அரசின் அறிவிக்கைகள் வருமாறு.

“நாட்டில், வெயில் காலங்களில் வறட்சியற்ற சூழலை உருவாக்கவும், மழைக் காலங்களில், வெள்ளப் பெருக்கால் ஏற்படும் பேரழிவை தடுக்கவும், 5.5 லட்சம் கோடி ரூபாய் செலவில், தேசிய நதிகள் இணைப்பு திட்டப் பணிகள் சூடுபிடித்து உள்ளன.

முதற்கட்டமாக, உ.பி., - ம.பி., மாநிலங்களில் பாயும், கென் - பெட்வா நதிகளை இணைக்கும் பணிகள், இன்னும் ஒரு மாதத்தில் துவங்க உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. நாட்டின் வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில்,இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், கடும் வறட்சி நிலவியது. அதற்கு நேர்மாறாக, இந்த ஆண்டு கொட்டித் தீர்த்த கனமழையால், பெரும்பாலான மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உ.பி., பீஹார், வடகிழக்கு மாநிலங்களான, அசாம், மணிப்பூர், நாகாலாந்தில் பெய்த கன மழையால், அந்த மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கடும் வறட்சி

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், சமீபத் தில், ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை யால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதே மாநிலத்தில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால், ஆயிரக் கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து, பலரும் தற்கொலை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நீர் பற்றாக்குறையால் ஏற்படும் வறட்சி, அதிக நீர்வரத்தால் ஏற்படும் வெள்ளத்திலிருந்து மக்களை காக்க, தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை, நிறைவேற்றும் முனைப்புடன், மத்திய அரசு செயல்பட துவங்கிஉள்ளது. பல

துறைகளின் தடையில்லா சான்றுகள் கிடைத் துள்ள நிலையில், முதற்கட்டமாக, உ.பி., - ம.பி., இடையே பாயும் நதிகளை இணைக்கும் பணிகள், இம்மாத இறுதி யில் துவங்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தில், 5.5 லட்சம் கோடி ரூபாய் செலவில், முக்கிய நதிகளை இணைப்பதற்கான பணிகள் துவங்கிவிட்டன. அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, சுற்றுச்சூழல், வனம் உள்ளிட்ட துறைகளின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. இன்னும், சில துறைகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அவற்றின் ஒப்புதல் கிடைத்தவுடன், முழுவீச்சில் பணிகள் நடக்கும்.

புலிகள் சரணாலயம்

முதற்கட்டமாக, உ.பி., - ம.பி.,யில் பாயும், கென் - பெட்வா நதிகள் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். காடுகள், புலிகள் சரணாலயம், பல கிராமங்கள் இடையே, நதிகள் இணைப்பு பணி நடக்க உள்ளதால், இத்திட்ட வரைபடத்தின் கீழ் வரும், 10 கிராமங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கானோர், வேறு இடங்களில் குடியமர்த்தப்படுவர்.

காட்டுப் பகுதியில் அணை மற்றும் நீர் வழித்தடம் அமைக்கப்பட்டாலும், வனவிலங்குகளுக்கோ, இயற்கை தகவமைப்பிற்கோ எவ்வித இடைஞ்சலும் இல்லாத வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, நாட்டின் பல மாநிலங்களில், 60 நதிகளை இணைக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

தீவிர முயற்சி

கடந்த, 2002ல், பா.ஜ.,வைச் சேர்ந்த, வாஜ்பாய் பிரதமராக இருந்த போதே, நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்த நேரத்தில், பல மாநிலங்களில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சி செய்ததால், அந்தந்த மாநில அரசுகள், நதிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

தற்போது, பெரும்பாலான மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி செய்வதால், இந்த சூழ்நிலையில், தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் சிரமம் இருக்காது.

நதி நீர் இணைப்பு திட்டத்தில், மிகப்பெரிய அணைகள் கட்டப்படுவதன் மூலம், அதிகளவு மின்உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம், மின் பற்றாகுறை உள்ள மாநிலங்களுக்கும், மின்சாரம் கிடைக்கும். பூமிக்கு அடியில், ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு, அதன் வழியே நதி நீர் வழிப்பாதை உருவாக்கப்பட்டு, பிற நதிகளுடன் இணைக்கும் திட்டமும் உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

எந்தெந்த மாநிலங்களில் இணைப்பு பணிகள்?:

உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். அண்டை மாநிலமான, ம.பி.,யிலும், முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சியே நடக்கிறது. எனவே, இரு மாநிலங்களிடையே பாயும் நதிகளை இணைப்பதில் சிக்கல் இருக்காது. இதன் மூலம், உ.பி., - ம.பி., மாநில விவசாய நிலங்களுக்கு தேவையான நீர், ஆண்டு முழுவதும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். அண்டை மாநிலமான, மஹாராஷ்டிராவிலும், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலங்களிடையே பாயும், பார் - தாபி - நர்மதை நதிகளை இணைக்கும் திட்ட வரை படம் தீட்டப்பட்டு, பணிகள் விரைவில் துவங்க உள்ளன. தமன் கங்கா மற்றும் பிஞ்சால் நதி களை இணைக்கும் திட்டமும், மத்திய அரசிடம் உள்ளதால், எதிர்காலத்தில், இந்த மாநிலங் களின் நீராதாரத்தில் எவ்வித சிக்கலும் ஏற்படாது.

மேற்கு மாநிலங்களான, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பா.ஜ., முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, ராஜஸ்தான் மாநிலங்களி டையே பாயும் நதிகள் இணைக்கப்படுவதால், மேற்கு மாநிலங்களின் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

காங்., முதல்வர் சித்தராமையா தலைமையிலான, கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி ஆற்றை, தென் மாநிலங்களில் பாயும் பிற நதிகளுடன் இணைப்பதால், தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநில மக்களின் நீராதாரம் பூர்த்தியாவதுடன், விவசாயம் செழிக்கும். வெள்ள காலங்களில், மழைநீர் வீணாக கடலில் கலப்பது தடுக்கப்பட்டு, அந்த நீரை அணைகளில் தேக்கி வைப்பதால்,எதிர்கால தேவைக்கு பயன்படுத்தலாம்.

கே எஸ்.இராதாகிருஷ்ணன் : வழக்கறிஞர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், நூலாசிரியர்,

rkkurunji@gmail.com

K S Radhakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment