Advertisment

தமிழ்நாட்டு நதிகளில் உள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகள்

தமிழகத்தில் உள்ள நதிகள் மற்றும் நதிபடுகையில் உள்ள அணைகள் பற்றிய விபரங்களை தருகிறார், கட்டுரையாளர் வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News in Tamil : Latest, Breaking, and Live News Updates, cauvery management authority meeting,

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

Advertisment

தமிழகத்தில் கரிகால் சோழன் அக்காலத்திலேயே கல்லணையை கட்டினார். அதற்கு பிறகு அறிவியல் வளர்ச்சியின் விளைவாக மேட்டூர், முல்லை பெரியாறு போன்ற அணைகள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. பல அணைகள் சென்னை ராஜதாணியின் முதல்வராக இருந்த ஓமந்தூரார், முதல்வர்களாக இருந்த குமாரசாமி ராஜா, பெருந்தலைவர் காமராஜர் காலங்களில் நாடு சுதந்திரம் பெற்றபின் முக்கிய அணைகள் கட்டப்பட்டது.

ஆனால் இந்த அணைகளில் பராமரிப்பு இல்லாமல் அதன் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. அணைகளில் ஒரு காலத்தில் சுற்றுலாப் பூங்காக்கள் இருந்தன. திரைப்படக் காட்சிகளும் அங்கே படம் பிடிக்கப்பட்டது. மாணவர்கள் சுற்றுலாவாக வந்தனர். அந்த அழகிய காட்சிகள் எல்லாம் அழிந்தேவிட்டன. ஒவ்வொரு நதிப் படுகையிலும் உள்ள முக்கிய அணைக்கட்டுகள் வரிசைப்படுத்தி கீழே சொல்லப்பட்டுள்ளது. இது தவிர பல தடுப்பணைகள் ஆங்காங்கு இருக்கின்றன. காவிரியில் மட்டும் 40 தடுப்பணைகளுக்கு மேல் திட்டமிட்டும் கட்டப்படாமல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இருக்கின்ற அணைகளையாவது அரசு பாதுகாக்குமோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

வராஹ நதி படுகை

1. வீடூர்

பெண்ணையாறு படுகை

2. கிருஷ்ணகிரி

3. சாந்தனுள்

4. துன்பஹள்ளி

5. பாம்பார்

6. வாணியாறு

வெள்ளாறு நதிப் படுகை

7. வெல்லிங்டன்

8. மணிமுக்தா நதி

9. கோமுகி நதி

காவேரி நதிப் படுகை

10. மேட்டூர்

11. சின்னாறு

12. கேளிகுளிஹல்லா

13. நாகவதி

14. தொப்பையாறு

15. பவானி சாகர்

16. குண்டேசி பள்ளம்

17. வரட்டுப் பள்ளம்

18. அமராவதி

19. பாலாறு பொரந்தவாறு

20. வரதமா நதி

21. உப்பளம் (பெரியாறு மாவட்டம்)

22. வட்டலைக் கரை ஓடை

23. பரப்பலாறு

24. பொன்னையாறு

25. உப்பார் (திருச்சி மாவட்டம்)

வைகை நதிப் படுகை

26. வைகை

27. மஞ்சளாறு

28. மருதா நதி

வைப்பார் நதிப் படுகை

29. பிளவுக்கல் (பெரியாறு நீர்த்தேக்கம்)

30. பிளவுக்கம் (கோயிலாறு நீர்த்தேக்கம்)

31. வெம்பக்கோட்டை

32. குள்ளுச் சந்தை

தாமிரபரணி நதிப் படுகை

33. மணி முத்தாறு

34. கடனா

35. ராம நதி

36. கருப்பா நதி

37. குண்டாறு

கோதையாறு நதிப் படுகை

38. பேச்சிப்பாறை

39. பெருங்சாணி

40. சித்தாறு - ஐ

41. சித்தாறு - ஐஐ

மேற்கு நோக்கிப் பாயும் நதிக்களை கிழக்கே திருப்புதல்

பெரியாறு நதிப் படுகை

42. பெரியாறு

43. மேல் நீராறு அணைக்கட்டு

44. கீழ் நீராறு

சாலக்குடி நதிப் படுகை

45. சோலையாறு

46. பரம்பிக்குளம்

47. தூனக்கடவு

48. பெருவாரிப் பள்ளம்

பாரதப் புழை நதிப் படுகை

49. ஆழியாறு

50. திருமூர்த்தி

(கட்டுரையாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர், நதிகள் இணைப்பு போராளி, இணை ஆசிரியர், கதைச்சொல்லி, திமுக செய்தி தொடர்பாளர் என பன்முகம் தன்மை கொண்டவர்.)

கே.எஸ்.ஆர்-இன் முந்தைய கட்டுரையை வாசிக்க...

K S Radhakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment