Advertisment

ஆயிரம் தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் : அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்

மொழியை வளப்படுத்த ஆயிரம் தமிழ் வார்த்தைகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மற்றும் தமிழ் பண்பாடுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

மொழியை வளப்படுத்த ஆயிரம் தமிழ் வார்த்தைகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் தமிழ்நாடு இளம் சிந்தனையாளர் அமைப்பு மற்றும் ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியி, தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தமிழ் உச்சரிப்பை இன்னும் வலிமைப்படுத்துவதற்காக மாதந்தோறும் ஆயிரம் புதிய தமிழ் வார்த்தைகளை அறிமுகம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கவுள்ளது. மாநிலத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள் உதவியுடன் இந்த திட்டம் அமலாக்கப்படும்.

உதாரணமாக கூகுள் தளத்தில் தமிழ் மொழியாக்கம் இலக்கணம் இல்லாமல் உள்ளது. ஆனால் மற்ற மொழிகள் நேர்த்தியாக மொழியாக்கம் செய்யப்படுகின்றன. இதற்கு காரணம், தமிழ் மொழியைச் சரியாக பரவச் செய்யாமல்விட்டதுதான்.

தமிழை புதிதாக கற்பவர்களுக்கு அது இன்னும் கடினமாக உள்ளது. எளிதாக உள் வாங்கிக் கொள்ளும் வகையில் இல்லை. உலக அளவில் தமி 16வது இடத்தில் உள்ளது. எனவே தமிழை மேலும் வளரச் செய்வதற்காக, அதை எளிமைப்படுத்துவதோடு அதை சமூக வலை தளங்கள் மூலம் பரவச் செய்வது அவசியமாகிறது. அனைவருக்கும் தொடர்புடைய மொழியாக தமிழை வளரச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment