Advertisment

'மண்டியிட்டு எவர் பாதங்களையும் தொட முடியவில்லை': மனுஷ்ய புத்திரன் அரசியல் கவிதை?

தமிழின் மிக முக்கியமான கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் எழுதியுள்ள, 'யாரும் எனக்கு எந்த இடத்தையும் தருவதிலை’ என்ற கவிதையைப் படித்து பலரும் லைக் செய்து கம்மெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Poet Manushyaputhran's political poem, Poet Manushyaputhran, Manushyaputhran, Manushyaputhran political poem draws attention in socila media, 'மண்டியிட்டு எவர் பாதங்களையும் தொட முடியவில்லை, மனுஷ்ய புத்திரன் அரசியல் கவிதை, அப்துல் ஹமீது, திமுக, poet Abdul Hameed Sheik Mohamed, Poet Manushyaputhran's political poem draws attention in socila media, Abdul Hameed Sheik Mohamed, DMK,

க்விஞர் மனுஷ்யபுத்திரன்

தமிழின் மிக முக்கியமான கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் எழுதியுள்ள, 'யாரும் எனக்கு எந்த இடத்தையும் தருவதிலை’ என்ற கவிதையைப் படித்து பலரும் லைக் செய்து கம்மெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர். கவிஞர் மனுஷ்யபுத்திரன் தி.மு.க சார்பில், டிவி விவாதங்களில் பங்கேற்று உறுதியான வாதங்களை முன்வைத்து வருகிறார். தற்போது, கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள இந்த கவிதை கவனம் பெற்றுள்ளது.

Advertisment

யாரும் எனக்கு

எந்த இடத்தையும் தருவதிலை

எந்த வாய்ப்பையும் வழங்குவதில்லை

எந்த வெகுமதியும் அளிப்பதில்லை

காரணம்

நான் இந்த சக்கர நாற்காலியிலேயே

அமர்ந்திருப்பதால்

என்னால் யார்முன்னும்

எழுந்து கைகட்டி நிற்க முடியவில்லை

குனிந்து வணங்க முடிவதில்லை

மண்டியிட்டு அமர முடிவதில்லை

எவருடைய பாதங்களையும் தொடமுடிவதில்லை

உயரங்களில் இருப்பவர்கள்

அவ்வாறு செய்வதையே விரும்புகிறார்கள்

அவ்வாறே செய்பவர்களுக்கே

எல்லா நற்பயன்களையும் அளிக்கிறார்கள்

நான் விரும்பினால்கூட

அதையெல்லாம் செய்ய முடியாது

சக்கர நாற்காலி

அதற்கெல்லாம் பெரிய தடையாக இருக்கிறது

சக்கர நாற்காலியில்

நான் ஒரு அரசனைபோல

எப்போதும் அமர்ந்திருக்கிறேன்

என் முதுகெலும்பு நேராகவே இருக்கிறது

அதனால் யாரும் எனக்கு

அன்பு செய்ய மறுக்கிறார்கள்

சக்கர நாற்காலி

என் உடலை

எந்த ஆபாச உடல்மொழியும் இல்லாமல்

எந்த அடிமைப் பாசாங்கும் இல்லாமல்

கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது

நான் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறேன்

எனக்கு கிடைக்கவேண்டிய எல்லாமே

இரண்டு கால்களால் எழுந்து நின்று

பிறகு குனிந்து வணங்குபவர்களுக்கு கிடைக்கிறது

சக்கர நாற்காலியில் இருக்கும் மனிதனால்

குனியவே முடியாது

இது அவர்கள் அகந்தையைக்

காயப்படுத்துகிறது

எல்லாப் பட்டியல்களிலிருந்தும்

அவர்கள் என் பெயரை அடித்துவிடுகிறார்கள்

நான் உறுதியான ஆதாரங்களை

உங்களுக்குத் தருகிறேன்

சக்கர நாற்காலி

ஒருவனை தலை நிமிர்ந்துவாழச் செய்கிறது

ஆனால் அதில் அமர்ந்திருக்கும் மனிதன்

எல்லோராலும் தோற்கடிக்கப்படுகிறான்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள இந்த கவிதை வாசகர்களால் அரசியல் கவிதையாகப் புரிந்துகொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டு வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Literature
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment