Advertisment

எழுந்து வரக்கூடாதா எங்கள் அம்மா? ‘ஐஇ தமிழ்’-க்கு சித்ரகுப்தன் சிறப்பு கவிதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறாது. நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் சித்ரகுப்தன் எழுதிய கவிதை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jayalalitha biopic, thalaivi,

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று (5.12.17) அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில் நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் சித்ரகுப்தன் எழுதிய கவிதை வாசகர்களுக்காக...

Advertisment

* எழுகதிர்

போலவே

எங்கள்

அம்மா

எழுந்து

வரக்கூடாதா...

* ஏழரைக்கோடி

மக்களுக்காக

எமனும்

திருந்தக் கூடாதா...

* புத்தொளியாய்

புரட்சித்தாய்

புறப்பட்டு

வரக்கூடாதா...

* புனித ஜார்ஜ்

கோட்டை

மீண்டும்

புதுகோலம்

பூணாதா...

* இறையில்லா

கோயிலாக

பிறையில்லா

வானமாக

திசையில்லா

படகாக

திகைக்குதம்மா

தமிழகம்...

* விடையில்லா

வினாவாக

விழியில்லா

முகமாக

வழியில்லா

வனமாகி

வாடுதம்மா

தமிழகம்...

* துடுப்பில்லா

படகாக

துடிப்பு

இல்லா

உடலாக

காட்சித்தருதே

தமிழகம்...

* மலர் இல்லா

மாலையாக

குயில் இல்லா

சோலையாக

தலையில்லா

தேகமாகி

தடுமாறுதே

தமிழகம்...

கதவு இல்லா

வீடாக

கடவுள் இல்லா

தேராக

திலகமில்லா

நெற்றியாக

திசைதெரியா

கப்பலாக

அலையில் ஆடும்

காகிதமாக

அலைபாயுதே

தமிழகம்...

* குழல் இல்லா

கண்ணனாக

சேவற் கொடியில்லா

கந்தனாக...

கிளியில்லா

மீனாளாக

புலியில்லா

ஐய்யனாக

பொலிவிழந்து

போனதே

எங்கள்

புரட்சித்தலைவி

இல்லா

தமிழகம்...

* தேம்பி அழும்

குரல் கேட்டு

தெய்வத்தின்

தீர்ப்பிலோர்

திருத்தம்

நிகழக்கூடாதா...

பறித்துப் போன

பத்துக்கோடி

தமிழர் உயிரை

பத்திரமாய்

எங்களிடமே

பகவானே நீ

திருப்பித்

தரக்கூடாதா...

- சித்ரகுப்தன்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment