Advertisment

தளபதி பர்த்டே ஸ்பெஷல்: பேப்பர் படிப்பது, தோசை சுடுவது ரசிகர்கள் பார்த்திடாத விஜய்!

சமையலறையில் அதிக நேரத்தை செலவிடுவது விஜய்யின் பழக்கம் என்பது பலருக்கு தெரியாத ஸ்பெஷல் தகவல்.

author-image
sreeja
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay birthday video

vijay birthday video

vijay birthday video : நடிகர் விஜய்..20 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் நடிகராகவே அறியப்பட்ட இந்த பெயர் இன்று எத்தனையோ ரசிகர்கள் மனதில் தலைவன் என்று அழைக்கப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளது என்றால் இந்த விதை அவ்வளவு எளிதாக தூவப்பட்டது இல்லை. தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக் கொண்டு இன்று தளபதி விஜய் அடைந்திருக்கும் உயரம் அவரை மேலும் மேலும் ரசிகர்கள் மனதில் உயர செய்கிறது.

Advertisment

ஆனால் இந்த இடத்தை நடிகர் விஜய் அடைய அவர் இழந்தது, சந்தித்த பிரச்சனைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திர சேகர் முதலில் தனது செல்ல மகன் ஜோசப்பை மருத்துவராக ஆக்க வேண்டும் என்றே எண்ணினார். ஆனால் அப்போதே தனது முடிவின் மீது படு தீவிரமாக இருந்த விஜய் வீட்டில் சண்டைப்போட்டு கொண்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் தான், அண்ணாமலை படத்தின் வசனத்தை நடித்து காட்டி விஜய் தனது திரைப்பயணத்தை துவக்கினார்.

publive-image

தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரின் இயக்கத்தில், விஜய்காந்துடன் இணைந்து நடித்த "செந்தூரபாண்டி" திரைப்படம், விஜயை ஓரளவிற்கு "சி சென்டர்" கொண்டு சேர்த்தது. இது போதாது என நினைத்த அவரின் தந்தை அடுத்ததாக இயக்கிய படம் தான் "பூவே உனக்காக" இந்த படம் மிகப் பெரிய வெற்றிய சேர்த்தது.

அன்று தொடங்கிய விஜய்யின் வெற்றிப்பயணம் சர்க்கார் வரை தொடர்ந்தது. இதோ அடுத்தது மாஸ்டர் ரிலீஸ்காக வெயிட்டிங். தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி, பாகஸ் ஆபிஸை எப்போது குறி தவறாமல் அடிக்கும் கில்லி விஜய் என்றால் அது மிகையல்ல.

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சமையலறையில் அதிக நேரத்தை செலவிடுவது விஜய்யின் பழக்கம்.இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தான் மேலே பகிரப்பட்டுள்ளது இந்த வீடியோ. பிரபல தனியார் தொலைக்காட்சியில் விஜய் அளித்த பேட்டி. ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தனது ஒரு நாளை விஜய் எப்படி எல்லாம் கழிப்பார் என்று அவரே விவரித்திருப்பார்.

publive-image

விஜய் பற்றிய சுவாரசிய தகவல்கள்:

* ஆரம்பத்தில் விஜய்யின் நடிப்பை பிரபல பத்திரிக்கை ஒன்று கிண்டல் செய்து எழுதி இருந்தது. சில ஆண்டுகள் கழித்து , அதே பத்திரிக்கை தனது அட்டை படத்திற்கு விஜய்-ய்யின்  படத்தை பதிவிட்டு விளம்பரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

* அதுவரை காதல் படங்களில் அதிக கவனம் செலுத்தி விஜய் முதன்முறையாக ஃபுல் டைம் ஆக்‌ஷல் ஸ்டைலில் இறக்கியது திருமலை படத்தின் தான். அதன் பின்பு,திருப்பாச்சி, சிவகாசி, மதுர, போக்கிரி தொடர்ந்து ஆக்‌ஷன் மன்னராக விஜய் அவதாரம் எடுத்தார்.

* தமிழ்சினிமாவின் இசையமைப்பாளர்களில் கிட்டத்தட்ட 14 பேர் இசையில் பாடியவர் தளபதி விஜய்.

* விஜய் முழுக்க முழக்க அம்மா செல்லம். கல்லூரி படித்த காலத்தில் பணம் தேவை என்றால் அம்மாவுக்கு அன்பு முத்தம் தருவது வழக்கம்.

publive-image

*விஜய்-க்கு பாலிவுட்டில் மிகவும் பிடித்த நடிகர் அமிதாப் பச்சன்

*தனது மனைவியை எப்போதுமே விஜய் கீஸ் என்றுதான் அழைப்பார். கார் பிரியரான விஜய்க்கு கறுப்பு நிற கார்கள் என்றால் கொள்ளை இஷ்டம். விஜய்க்கு தங்க நகைகள் அணிவது சுத்தமாக பிடிக்காது.

தமிழை தவிர பிற மொழிகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக நிற்கும் விஜய்-ல்லு எல்லா நாடுகளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

அவமானம், அவமதிப்பு, புறக்கணிப்பு, வலி, கண்ணீர் - ஜோசப் விஜய்யின் குட்டி ஸ்டோரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment