மனிதனின் ஃப்ரெஷ் மூளை எப்படியிருக்கும் தெரியுமா? இந்த வீடியோவை பாருங்கள்

நமது செயல்பாடுகளை மூளை எப்படி கட்டுப்படுத்துகிறது, நம்மை எப்படி வழிநடத்துகிறது என்பதிலெல்லால் பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சிக்கலான விஷயம் என்ன தெரியுமா? கிரகங்கள், விண்வெளி, செயற்கைக்கோள், தமிழக அரசியல், மோடி எடுக்கும் முடிவுகள் இவற்றில் எதுவுமே இல்லை. மனித மூளைதான் மிகவும் சிக்கலான ஒன்று. அளவில் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால், அவற்றின் செயல்பாடு, எந்த நேரத்தில் எப்படி இருக்கும்? அவற்றில் உள்ள நுண்ணிய நரம்பிழைகள், தசை உள்ளிட்டவை குறித்த ஆராய்ச்சிகள் இன்றளவும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

நமது செயல்பாடுகளை மூளை எப்படி கட்டுப்படுத்துகிறது, நம்மை எப்படி வழிநடத்துகிறது என்பதிலெல்லால் பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், மூளையின் பல்வேறு முக்கிய பாகங்களான மூளைத்தண்டு, சிறுமூளை, பெருமூளை இவையெல்லாம் எப்படி இருக்கும்? அவற்றின் தன்மைகள் என்ன என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?

தெரியாது என்றால் நிச்சயம் இந்த வீடியோவை பார்த்துவிடுங்கள். அப்போதுதான் இறந்த மனிதரிடமிருந்து அகற்றப்பட்ட மூளையை கையில் வைத்துக்கொண்டு அதன் பாகங்களை மருத்துவர் ஒருவர் விளக்குகிறார். அந்த வீடியோவில், மூளையின் சில பகுதிகளில் நம் விரலை வைத்து அழுத்தினாலே அப்பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும் என மருத்துவர் விளக்குகிறார். இந்த வீடியோவை பார்த்தவுடன் மூளை குறித்த உங்கள் அக்கறை அதிகரிக்கும்.

×Close
×Close