Advertisment

திருவண்ணாமலை தீபத் திருவிழா: கட்டண தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் 'புக்' செய்வது எப்படி?

மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
Thiruvannamalai

Thiruvannamalai Deepam 2023

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்திற்கான டிக்கெட் நாளை கோயில் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

Advertisment

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் இன்று விமர்சையாக நடந்தது.

தொடர்ந்து வரும் 26-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளன. இதற்காக, 1,000 மீட்டர் காடா துணி மற்றும் 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்படவுள்ளன.

மகா தீபத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் தொடர்ந்து தரிசிக்கலாம்.

கார்த்திகை தீபத் திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் கோயில் இணையதளத்தில் நாளை (நவ.24) வெளியிடப்பட உள்ளது.

நவம்பர் 26 அன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் காண ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதிச் சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகா தீப தரிசனம் செய்ய ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதிச் சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த அனுமதிச் சீட்டுகள் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் நாளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.

ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?

கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் இமெயில்  முகவரி கண்டிப்பாகத் தேவை. ஓர் ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டணச்சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் டிக்கெட் மூலம் பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அன்று அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஆன்லைன் மூலம் டிக்கெட் மூலம் மகா தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மதியம் 2.30 முதல் 3.30 வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த 2 தீப நிகழ்வுகளைக் காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோவிலின் கிழக்கு ராஜ கோபுரம் (திட்டி வாயில்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள், எனவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tiruvannamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment