பிரபல சீரியல் நடிகை லாவன்யா சமீபத்தில் கொழுக்கு மலை, மூணாறு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்கள், வீடியோஸை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
கொழுக்குமலை
கொழுக்குமலைக்கு நாம் கேரளா வழியாகத்தான் செல்ல முடியும் என்றாலும், அது தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவுக்கு உட்பட்டது.
மூணாறிலிருந்து கொழுக்குமலை செல்ல வேண்டுமென்றால் தேனி செல்லும் பேருந்து ஏறி `பவர் ஹவுஸ்’ பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். அங்கிருந்து சூர்யநெல்லி எனும் நகருக்கு ஷேர் ஆட்டோ கிடைக்கும். சூர்யநெல்லியில் இருந்துதான் கொழுக்குமலை செல்வதற்கான ஜீப்புகள் கிளம்பும். சூர்யநெல்லியிலிருந்து கொழுக்குமலை 12 கி. மீட்டர் தொலைவு.
கொழுக்குமலை வியூ பாண்டிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதுதான் சிறப்பு என்பதால், அதிகாலை 4.30 - 5.30 மணிக்கெல்லாம் முதல் சுற்று கிளம்பிவிடுகிறது.
கொழுக்கு மலையில் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள பழைமையான தேயிலை தொழிற்சாலை இருக்கிறது.
மூணாறு
மலையேற்றப் பாதைகள், பரந்த தேயிலைத் தோட்டங்கள், கன்னி காடுகள், உருளும் மலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஏராளமான இயற்கை அழகுக்காக சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படும் சொர்க்க மலை வாசஸ்தலம் ஆகும்.
மூணாறில், இறவிக்குளம் தேசிய பூங்கா, அட்டுக்காடு நீர்வீழ்ச்சிகள் மாட்டுப்பட்டி அணை, நியமக்கடா எஸ்டேட், எக்கோ பாயிண்ட், சின்னாறு ட்ரெக்கிங் பாயிண்ட், சந்தன மரக்காடு, செங்குளம் போட்டிங், குந்தளா, லக்கோம் நீர்வீழ்ச்சி ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள். மூணாறு யானைச் சவாரி மிகவும் பிரபலம்.
இந்த பரந்து விரிந்த அற்புதமான தேயிலைத் தோட்டங்கள் உங்களுக்கு நீங்கா நினைவுகளை தரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“