இந்த வெயில் காலத்தில் இப்படி பூசணிக்காய் வைத்து புளிக்குழம்பு செய்து சாப்பிடுங்க
தேவையான பொருட்கள்
புளி எலுமிச்சை அளவு
1 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
5 சின்ன வெங்காயம்
1 கொத்து கருவேப்பிலை
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1 ½ ஸ்பூன் மல்லிப் பொடி
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
உப்பு தேவையான அளவு
1 கப் பூசணிக்காய்யை வேக வைத்தது
கால் ஸ்பூன் வெல்லம்
செய்முறை : முதலில் நாம் பூசணிக்காய்யை கழுவி, நறுக்கி வேக வைக்க வேண்டும். புளியை நாம் தண்ணீரில் கரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு சேர்க்கவும். சின்ன வெங்காயம் நறுக்கியதை சேர்க்கவும், கருவேப்பிலை சேர்த்து கிளரவும். புளி கரைசலை சேர்க்கவும். தொடர்ந்து அதில் மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, மிளகாய் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து பூசணிக்காய்யை சேர்த்து கொதிக்க வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து வெல்லம் சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“