Advertisment

மழலை குரலில் "அண்ணாமலை மாமா" என அழைத்த சிறுமி; வைரல் வீடியோ

கோவையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை சிறுமி ஒருவர் "அண்ணாமலை மாமா" என அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Annamal cbe.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவையில் தமிழ்நாடு பா.ஜ.க  மாநில தலைவர் அண்ணாமலையை ஒரு சிறுமி "அண்ணாமலை மாமா" என அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 18) மாலை கோவையில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் மக்களிடையே வாக்குச் சேகரிக்கும் வகையில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின் நிகழ்ச்சியை முடித்து கேரளா புறப்பட்டு சென்றார். 

இந்நிலையில்,  பிரதமரின் ரோடு ஷோ நிகழ்ச்சி முடிந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், கேசவ விநாயகமும் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது மானாமதுரை பகுதியை சேர்ந்த ஷர்மிதா என்ற சிறுமி அண்ணாமலையை பார்த்து "அண்ணாமலை மாமா" என்று அழைத்துக் கொண்டே இருந்தார். 

உடனடியாக அந்த சிறுமையை பார்த்து ஓடி வந்த அண்ணாமலை "மோடி தாத்தாவை பார்த்தீர்களா?" என்று கேட்டு சிறுமியை தூக்கி வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். சிறுமியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    BJP Annamalai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment