Advertisment

பட்டு போன்ற, மிருதுவான கூந்தலுக்கு நேச்சுரல் ஹோம்மேட் ஷாம்பு: எப்படி பண்றதுனு பாருங்க

பட்டுப்போன்ற, மிருதுவான கூந்தலுக்கு உறுதியளிக்கும் செஃப் மேக்னா கம்தார் முயற்சி செய்து பரிசோதித்த இயற்கை ஷாம்பு.

author-image
WebDesk
New Update
Hair mask

Natural Homemade Shampoo

நம் தலைமுடியை பளபளப்பாகவும், பட்டுப் போலவும், நீளமாகவும், பொடுகு இல்லாததாகவும் மாற்ற, இந்த பிரச்னைகளை சரி செய்வதாகக் கூறும் பல தயாரிப்புகளை அடிக்கடி பயன்படுத்துகிறோம்.

Advertisment

பல தயாரிப்புகள் முடி உதிர்தலில் இருந்து உடனடி நிவாரணம் தருகின்றன, ஆனால் அத்தகைய முடிவுகள் தற்காலிகமானவை மட்டுமே, மேலும் உங்கள் முடி உதிர்வு மோசமாகலாம். அதற்குப் பதிலாக இயற்கையான பொருட்களைக் கொண்ட இயற்கையான வீட்டு வைத்தியங்களை ஒருவர் தேர்வு செய்யலாம், இவை பக்க விளைவுகள் இல்லாதது.

அதுதான் இன்று உங்களுக்காக எங்களிடம் உள்ளது, பட்டுப்போன்ற, மிருதுவான கூந்தலுக்கு உறுதியளிக்கும் செஃப் மேக்னா கம்தார் முயற்சி செய்து பரிசோதித்த இயற்கை ஷாம்பு.

எனது பாட்டிக்கு நீண்ட பட்டுப் போன்ற முடி இருந்தது, இதை அவர் என் அம்மாவுக்குக் கற்றுக் கொடுத்தார், என் அம்மா இந்த ஷாம்பூவை என் சகோதரி மற்றும் என் தலைமுடியில் பயன்படுத்துவார். இத்தனை வருடங்களாக, கடையில் வாங்கும் ஷாம்புக்குப் பதிலாக, இந்த இயற்கையான வீட்டில் தயாரிக்கப்படும் ஷாம்பூவைத் தான் பயன்படுத்துகிறோம். இந்த ஷாம்பு மிகவும் சிறந்தது, இயற்கையானது மற்றும் பக்கவிளைவுகள் இல்லாதது; மேலும் பல நன்மைகள் உள்ளன என்று செஃப் மேக்னா கம்தார் கூறினார்.

தேவையான பொருட்கள்

*100 கிராம் பூந்திக்கொட்டை (Soapnut)

*20 கிராம் சீகைக்காய்

*20 கிராம் உலர வைத்த நெல்லிக்காய்

*2 கப் தண்ணீர்

செய்முறை

முதலில், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காயில் இருந்து விதைகளை அகற்றவும்.

பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுக்கவும்.

நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காய் ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து, தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க வைக்கவும்.

அதை ஆற விடவும்.

பூந்திக்கொட்டையின் அனைத்து கூழ்களையும் பிழிந்து கொள்ளவும்.

ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி (not a fine strainer) ஷாம்பூவை வடிகட்டவும், இதனால் நீங்கள் திக்கான ஷாம்பூ பெறுவீர்கள்.

இதை பாட்டிலில் சேமிக்கவும்.

இது 100% இயற்கையான ஷாம்பு ஆதலால் கடையில் வாங்கும் ரசாயன ஷாம்புகளின் அளவு நுரை வராது.

இதை பயன்படுத்துவதற்கு முன் முடிக்கு எண்ணெய் தடவ பரிந்துரைக்கப்படுகிறது. சிலர் இந்த ஷாம்பூவைப் பயன்படுத்திய பிறகு தலைமுடி சிறிது வறண்டு போகலாம். அப்ளை செய்யும் போது கவனமாக இருக்கவும். இது உங்கள் கண்களுக்குள் சென்றால், அது உங்களுக்கு எரியும் உணர்வைத் தரும்.

நன்மைகள்

* முடியை பளபளப்பாகவும், பொலிவாகவும் ஆக்குகிறது

* முடி நரைப்பதைக் கட்டுப்படுத்த உதவுகிறது

* சிறந்த முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது

* பொடுகை போக்குகிறது

* உச்சந்தலையில் உள்ள பேன்களை அழிக்க உதவுகிறது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment