ஒரு முறை இப்படி மேத்தி மட்டர் மலாய் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
2 பெரிய வெங்காயம்
3 பூண்டு
அரை இஞ்சு துண்டு
10 முந்திரி
3 பச்சை மிளகாய்
2 கப் தண்ணீர்
மேத்தி அரை கப்
1 பட்டை, 1 கிராம்பு, 1 பிரியாணி இலை
எண்ணெய் 3 ஸ்பூன்
பட்டர்
அரை கப் பச்சை பட்டாணி
அரை கப் க்ரீம்
செய்முறை: மிக்ஸியில், வெங்காயம், பூண்டு,முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துகொள்ளவும். மேத்தியை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், பட்டர் சேர்த்து, கிராம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து கிளரவும். அரைத்த பேஸ்டை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் பச்சை பட்டணி சேர்த்து கொள்ளவும். வெந்ததும், மேத்தியை சேர்த்து கிளரவும். தொடர்ந்து க்ரீமை சேர்த்து கிளரவும்.