Advertisment

ரூ.899-டில் விமான பயணம்... இன்டிகோ-வின் மழைகால அதிரடி ஆஃபர்!

டெல்லி- மும்பை இடையேயான டிக்கெட் விலை ரூ. ரூ.2,100 முதல் ஆரம்பம்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
indigo

கோடைகால விடுமுறையையொட்டி ஏப்ரல்-ஜூன் மாதங்களில் விமான பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பது வழக்கம். ஆனால்,கோடை கால விடுமுறை முடியும் தருவாயில் அப்படியே அந்த பயணிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிடும். இதைக்கருத்தில் கொண்டு பயணிகளை கவரும் வகையில் பல்வேறு விமான நிறுவனங்களும் அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகின்றன.

Advertisment

இந்நிலையில் இன்டிகோ(IndiGo) விமான நிறுவனமானது மழைகால ஆஃபரை இன்று முதல் மூன்று நாட்கள் வழங்குகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன்14-ந் தேதி மூன்று நாட்கள் இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிடும்படியாக டிக்கெட்டின் விலை ரூ.899 முதல் ஆரம்பமாகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட பகுதிகளிடையே குறைந்த விலையில் விமான பயணம் மேற்கொள்ளலாம்.

அதன்படி, டெல்லி-கோவை, கோவா- சென்னை, சென்னை-போர்ட் பிளைர், மும்பை-கோவா, ஜம்மு-அமிர்தசரஸ், டெல்லி-உதய்பூர், அகமதாபாத்-மும்பை, ஹைதராபாத்-மும்பை, மற்றும் கொல்கத்தா-அகார்தலா உள்ளிட்ட பகுதிகளுக்கிடையான விமான பயணங்களுக்கு இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது.

டெல்லி- மும்பை இடையான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.7000. ஆனால் இந்த ஜூன் மாதம் மட்டும் டெல்லி- மும்பை இடையேயான டிக்கெட் விலை ரூ. ரூ.2,100 மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோஏர்(GoAir) விமானசேவை நிறுவனமும் இதேபோன்ற ஆஃபர்களை வழங்குவதாக கூறப்படுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment