Advertisment

“வேகமாக சாப்பிட்டீங்கன்னா குண்டாகிடுவீங்க”: எச்சரிக்கும் ஆய்வறிக்கை

வளர்சிதை மாற்ற குறைபாடுகள், இதய நோய்கள், நீரிழிவு நோய், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மெதுவாக சாப்பிட்டால் குறையும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
obesity, weight loss, heart diseases,food habit,

மெதுவாக சாப்பிட்டால் எளிதில் எடை கூடாது என ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், வளர்சிதை மாற்ற குறைபாடுகள், இதய நோய்கள், நீரிழிவு நோய், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மெதுவாக சாப்பிட்டால் குறையும் என அந்த ஆய்வு கூறுகிறது.

Advertisment

அமெரிக்காவில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருத்தல், நல்ல கொழுப்பு குறைந்து காணப்படுதல் இந்த மூன்றில் ஒரு பிரச்சனை அல்லது மூன்றுமே இருப்பவர்களுக்கு வளர்சிதை மாற்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.

இந்த ஆய்வுக்காக 642 ஆண்கள் மற்றும் 441 பெண்கள் மாதிரிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டனர். கடந்த 2008-ஆம் ஆண்டு அவர்களுக்கு வளர்சிதை மாற்ற குறைபாடுகள் இல்லாதது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவர்கள் அனைவரும் மெதுவாக உண்பவர்கள், நடுத்தர வேகத்தில் உண்பவர்கள், வேகமாக உண்பவர்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். இதையடுத்து, 5 ஆண்டுகள் கழித்து 2013-ஆம் ஆண்டு மீண்டும் அவர்களது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அப்போது, வேகமாக உண்பவர்களுக்கு வளர்சிதை மாற்றம் ஏற்பட 11.6 சதவீதம், நடுத்தர வேகத்தில் உண்பவர்களுக்கு 6.5 சதவீதமும், மெதுவாக உண்பவர்களுக்கு 2.3 சதவீதமும் வாய்ப்பிருப்பது தெரியவந்துள்ளது.

இதன்மூலம், வேகமாக உண்பவர்களுக்கு உடல் பருமன், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்தல், பெருத்த இடுப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பது தெளிவாகிறது. வேகமாக சாப்பிடுபவர்களுக்கு நிறைவான உணர்வு ஏற்படுவதில்லை. அதனால், அதிகமாக உண்பதால் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment