உடல் பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றை தவிர்க்க சில எளிமையான வழிமுறைகளை தினந்தோறும் கடைபிடித்தாலே போதும். புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். அப்படி, உடல் பருமனிலிருந்து தப்பிக்க இதோ இந்த 8 டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
1. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்:
நீங்கள் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகிய சத்துகள் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், தாதுச்சத்து, வைட்டமின்கள், ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்து, புரோபயோட்டிக்ஸ் ஆகியவை உங்கள் உடலில் உண்டாகும்.
2.நல்லதையே சாப்பிடுங்கள்:
காலை உணவை ஆரோக்கியமான உணவுகளுடன் ஆரம்பியுங்கள். ஏனென்றால், இரவு சாப்பிட்டுவிட்டு சுமார் 10 மணிநேரம் கழித்து உண்கிறோம். காலையில் சத்தான உணவுகளை உட்கொள்ளுதல் மூலம் அந்நாள் முழுவதும் அதிக கலோரிகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை தவிர்க்கலாம்.
3. சுறுசுறுப்பாக இருங்கள்:
எந்தவொரு வேலையும் செய்யாமல் இருப்பது உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். குறிப்பிட்ட நேரம் வேகமாக நடைபயிற்சி மேற்கொள்ளுதல் கூட பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
4. மன அழுத்தத்தை குறையுங்கள்:
உடற்பயிற்சி, மற்றவர்களுடன் பழகுதல், தியானம், இசை, இயற்கை, குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல் போன்றவை மூலம் மன அழுத்தத்தை உங்களிடமிருந்து தள்ளி வையுங்கள்.
5. நல்ல உறக்கம்:
குறைவான உறக்கம் மூலம் நமது உடல் செயல்பாடுகள் குறையும். இதனால், உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
6. மருத்துவரை முறையாக அணுகுங்கள்:
உங்கள் மருத்துவரை குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
7. புகை பழக்கம், மது பழக்கத்தை தவிருங்கள்:
செரிமானத்துக்கு உதவக்கூடிய என்சைம்களின் உற்பத்தியை புகையிலை தடை செய்கிறது. மதுவை முழுமையாக விட்டொழிக்க முடியாவிட்டாலும், அதனை படிப்படியாக குறைத்தலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
8. சரியான உணவு கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்:
நாள் முழுவது உண்ணாமல் இருத்தல், நீண்ட நேரம் பசியுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும். இறைச்சி, மீன், கோதுமை, பால் பொருட்களை முழுமையாக தவிர்க்கவும் கூடாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.