Advertisment

சுவை, ஹெல்தியான காலை உணவு: 10 நிமிடத்தில் செய்யலாம் பாருங்க

முட்டை அடை தோசை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
sada
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுவை, ஹெல்தியான முட்டை அடை தோசை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

கடலைப் பருப்பு- 100 கிராம் 

பொட்டுக் கடலை- சிறிதளவு  

முட்டை- 5 

வெங்காயம்- 2 

பச்சை மிளகாய்- 2 

பச்சரிசி- 200 கிராம் 

உப்பு- தேவையான அளவு 

மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

செய்முறை 

முதலில் கடலைப் பருப்பு மற்றும் பச்சரிசியை ஊற வைத்து எடுக்கவும். ஊற வைத்த கடலைப் பருப்பு மற்றும் அரிசியுடன், பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

அரைத்து வைத்துள்ள கடலைப் பருப்பு மற்றும் பச்சரிசி கலவையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், முட்டை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும் தயாரித்து வைத்துள்ள அடை மாவை ஊற்றி 

இருபுறமும் வேக வைத்து எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சுவை, ஆரோக்கியமான முட்டை அடை தோசை தயார். தேங்காய், கார சட்னி வைத்து சாப்பிடலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment