Advertisment

உங்கள் தலைமுடிக்கு சரியான முறையில் எண்ணெய் தடவுகிறீர்களா? தோல் மருத்துவர் என்ன சொல்கிறார்?

தோல் மருத்துவ நிபுணர் ரஷ்மி ஷெட்டி, உங்கள் தலைமுடிக்கு சரியான முறையில் எண்ணெய் தடவுவதற்கான வழிகளைப் பரிந்துரைக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hair Care Tips

Dermatologist shares tips to oiling your hair the right way

உச்சந்தலையில் வறட்சி ஏற்படாமல் இருக்க, வழக்கமான ஹேர் ஆயில் மசாஜ்கள் அத்தியாவசியம், ஆனால் பலர் இந்த முக்கியமான முடி பராமரிப்பு வழக்கத்தை தவறவிடுகின்றனர்.

Advertisment

தோல் மருத்துவ நிபுணர் ரஷ்மி ஷெட்டி, இது போன்ற பொதுவான பிரச்னைகளை நிவர்த்தி செய்ய, உங்கள் தலைமுடிக்கு சரியான முறையில் எண்ணெய் தடவுவதற்கான வழிகளைப் பரிந்துரைக்கிறார்.

உங்கள் உச்சந்தலை வறண்டு, செதில்களாக இருந்தால், தோல் மருத்துவரை அணுகுமாறு அவர் பரிந்துரைத்தார். அடிப்படை பிரச்சனை பொடுகு இல்லை என்றால், உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் எண்ணெய் தடவுவதை நீங்கள் பாதுகாப்பாக தொடரலாம்.

உண்மையில், உலர்ந்த மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சருமத்தை எவ்வாறு கவனித்துக்கொள்வீர்களோ, அதேபோன்று உங்கள் உச்சந்தலையிலும் எண்ணெய் தடவ வேண்டும். இது பாதுகாப்பானது. நீரேற்றம் மற்றும் ஆரோக்கியமான முடியை பராமரிக்க உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் தடவுவது பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் தலையில் எண்ணெய் பசை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் உச்சந்தலை இயற்கையாகவே எண்ணெய் பசை இருந்தால்’ முடிக்கு மட்டுமே எண்ணெய் தடவவும், உச்சந்தலையைத் தவிர்க்கவும். இந்த வழியில் உங்கள் தலைமுடி மென்மையாகவும், உச்சந்தலையில் பிசுபிசுப்பு இல்லாமல் ஈரப்பதமாகவும் இருக்கும்.

தற்போதைய காலகட்டத்தில் காற்றில் உள்ள மாசுபாடு மற்றும் நச்சுகள்’ தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதை ஊக்குவிக்க ஒரு முக்கிய காரணம் என்று மருத்துவர் ஷெட்டி குறிப்பிட்டார்.

முடிக்கு ஏதேனும் சேதம் ஏற்படுவதற்கான முதல் அறிகுறி அது “உலர்ந்து போவது”. உங்கள் முடி மற்றும் உச்சந்தலை வறண்டு இருந்தால், உங்கள் முடி பராமரிப்பு முறைக்கு அவசியம் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் உதவும் வகையில், சிறிது சூடான ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யலாம். "ஒரு மென்மையான பயன்பாடு அதிக செயல்திறனுக்கான திறவுகோலாகும்",.

எண்ணெயைக் கழுவ உதவும் சில பரிந்துரைகள் இங்கே:

நீங்கள் ஒரு சாதாரண ஹேர் வாஷ் நாளில் பயன்படுத்தும் ஷாம்பூவை’ வழக்கமான அளவு எடுத்து, அதை அரை கப் தண்ணீரில் கரைக்கவும். இது தயாரிப்பு உங்கள் முடி முழுவதும் சமமாக பரவுவதை உறுதி செய்யும்.

பெரும்பாலான எண்ணெய்களைக் கழுவுவதற்கு ஒரு முறை ஷாம்பு பயன்படுத்தினால் போதுமானது, ஆனால் நீங்கள் விளக்கெண்ணெய் போன்ற கனமான எண்ணெயைப் பயன்படுத்தினால், இரண்டு முறை கழுவுதல் தேவைப்படலாம்.

* ஷாம்பூவை உங்கள் தலைமுடியில் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம், ஏனெனில் அது உலர்ந்து போகும். "சீக்கிரம் கழுவ மருத்துவர் ஷெட்டி பரிந்துரைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Hair Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment