Advertisment

சிக்கன், முட்டை சேர்த்து சுவையான கிரேவி: இப்படி செய்து அசத்துங்க

சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Dragon chicken
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுவையான சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

சிக்கன் – அரை கிலோ

முட்டை – 4

வெங்காயம் – 100 கிராம்

இஞ்சி – சிறிதளவு 

பூண்டு – 6 பல்

காய்ந்த மிளகாய் – 4

தனியா – 1 டேபிள் ஸ்பூன் 

மிளகு – 2 ஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க

செய்முறை 

சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். முட்டையை வேக வைத்து மஞ்சள் கருவை நீக்கி இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தனியா, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். அரைத்த மசாலாவை சேர்த்து சிக்கனையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். சிக்கனும், மசாலாவும் சேர்த்து கெட்டியானதும் நறுக்கி வைத்த முட்டையைச் சேர்த்துக் கிளறவும். குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கினால் சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment