Advertisment

ஜிம்மில் சிட்டப் செய்யும்போது கீழேவிழுந்து விபத்து: படுக்கையில் முடங்கிய இளம்பெண்

ஜிம்மில் உள்ள உடற்பயிற்சி இயந்திரங்களை மிக கவனமாகக் கையாள வேண்டும். இல்லையென்றால் உயிர்போகும் சம்பவங்களும் நிகழ்ந்துவிடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜிம்மில் சிட்டப் செய்யும்போது கீழேவிழுந்து விபத்து: படுக்கையில் முடங்கிய இளம்பெண்

உடல் எடையைக் குறைக்க, கூட்ட, சிக்ஸ் பேக் உருவாக என தங்கள் உடல் மீது கவனம் கொண்டவர்கள், ஜிம்முக்கு செல்வார்கள். அங்குள்ள உடற்பயிற்சி இயந்திரங்களை மிக கவனமாகக் கையாள வேண்டும். இல்லையென்றால் உயிர்போகும் சம்பவங்களும் நிகழும்.

Advertisment

அப்படித்தான், பிரேசிலை சேர்ந்த மார்செல் மேன்க்யூசோ, 23 (Marcelle Mancuso) சட்ட பட்டதாரியாவார். இவர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதென்றால் வெறி. கடந்த 2016-ஆம் ஆண்டு உடற்பயிற்சி சாதனமொன்றின் பாகம் அவர் கழுத்தின் மீது விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு கடும் பாதிப்புகளை சந்தித்தார்.

அதேபோல், தலைகீழ் சிட்டப்ஸ் எனப்படும், கம்பியொன்றில் தலைகீழாக கவிழ்ந்து மேலெழும்பும் மிகவும் கடினமான சிட்டப்ஸை மார்செல் மேற்கொண்டார். அப்போது, அவர் கீழே விழுந்ததில், கை, கால் இயக்கத்தை இழந்து முற்றிலும் செயலற்று போனார். இதனால், அவரது முதுகு தண்டுவடம் இறுக்கி படுக்கையிலேயே முடங்கினார்.

Aqui se come e aqui se queima ! #comerrezarecorrer #domingotemtambem ????????

A post shared by Marcelle Mancuso (@marcellemancuso) on

அதன்பின்பு, பல்வேறு தெரபிகள் மேற்கொண்டு மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிகொண்டிருக்கிறார் மார்செல்.

“அந்த விபத்திற்கு 4 மாதங்கள் கழித்து என் கால்களை இயக்க துவங்குகிறேன். மயக்கம் உள்ளிட்டவை இப்போது எனக்கு ஏற்படுவதில்லை. இப்போது நடக்கிறேன். என் கால்கள் எனக்கு ஒத்துழைக்கின்றன”, என்கிறார் மார்செல்.

“இப்போது நான் இயல்பான வாழ்க்கையை வாழ்கிறேன். அதற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். வாழ்க்கையில் மிக எளிமையான செயல்களை இப்போது நான் கற்றுக்கொள்கிறேன். படுக்கையிலிருந்து எழுந்து யாருடைய உதவியும் இல்லாமல், என் பற்களை துலக்குதல் உள்ளிட்டவை.”, எனக்கூறும் மார்செல் மெல்ல குணமடைந்து வருகிறார்.

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment