யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா, இஸ்ரேல் விலகல்!

யுனெஸ்கோ அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்காவை தொடர்ந்து , இஸ்ரேலும் விலகுவதாக அறிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சபை செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அந்த அமைப்பிற்கான ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள இஸ்ரேல், தானும் யுனெஸ்கோவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

ஐ.நா சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ பாலஸ்தீனத்தை அங்கீகரித்து வருகிறது. இதனால், யுனெஸ்கோ அமைப்பானது இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில், யுனெஸ்கோவிற்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற போவதாக அமெரிக்க அறிவித்தது.

யுனெஸ்கோவிற்கு பெற்றுவரும் 22 சதவீத தொகையை அமெரிக்கா மட்டும் அளித்து வருகிறது. அதாவது, ஆண்டு தோறும் 70 மில்லியன் டாலர்களை யுனெஸ்கோவிற்கு அமெரிக்கா வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்க வெளியேறும் நிலையில், பாதுகாப்பு, நிபுணத்துவம் உள்ளிட்டவற்றில் யுனெஸ்கோவிற்கு அமெரிக்க ஆதரவு அளிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.மெலும், அந்த அமைப்பில் அமெரிக்கா உறுப்பினராய் இல்லாமல், பார்வையாளராக தொடரும் எனவும் அமெரிக்கா தெரிவித்தது. 2018-ம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கை அமெரிக்கா அமல்படுத்தவுள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது: அமெரிக்காவின் நடவடிக்கை துணிச்சலானது மற்றும் நியாயமானது. அபத்தமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள யுனெஸ்கோ, பாரம்பரியத்தை காப்பதற்கு பதிலாக அதனை அழித்து வருகிறது என்றார்.

பாலஸ்தீனத்தை முழுநேர உறுப்பினராக அங்கீகரிக்கும் ஐ.நாவின் எந்தவொரு அமைப்பிற்கும் அமெரிக்கா நிதியுதவி வழங்காது என்ற 15 ஆண்டுகளுக்கு அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது. அதனை சுட்டிக்காட்டி 2011-ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தற்போது, யுனெஸ்கோ நிறுவனத்திற்கு அளித்துவரும் ஆதரவை முழுமையாக நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

×Close
×Close