Advertisment

அடேங்கப்பா! இந்திய ரயில்வேயில் 90,000 வேலை: முக்கிய விவரங்கள் இதோ

தொழில்நுட்ப உதவியாளர்கள், லோகோ பைலட்ஸ் உட்பட 90,000 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அடேங்கப்பா! இந்திய ரயில்வேயில் 90,000 வேலை: முக்கிய விவரங்கள் இதோ

தொழில்நுட்ப உதவியாளர்கள், லோகோ பைலட்ஸ் உட்பட 90,000 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது, அரசு பணியில் சேர வேண்டும் என விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் சிலவற்றை காணலாம்.

Advertisment

- இந்திய ரயில்வேயின் இந்த அறிவிப்பு உலகிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்புக்கான திட்டமாக கருதப்படுகிறது.

- குரூப் சி (Level I) பிரிவில் உள்ல டிராக் மெயிண்டெய்னர், பாயிண்ட்ஸ் மேன், ஹெல்ப்பர், கேட்மேன், போர்ட்டர் மற்றும் குரூப் சி (Level II) அசிஸ்டண்ட் லோகோ பைலட்ஸ், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்திய ரயில்வேயின் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

- இதற்கான கணினிவழி தேர்வு உலகிலேயே மிகப்பெரியளவிலான தேர்வாக கருதப்படுகிறது. ஏப்ரல் - மே மாதத்தில் இத்தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- 10-ஆம் வகுப்பு, ஐடிஐ உள்ளிட்ட கல்வித்தகுதி கொண்டவர்களுக்குமான பணியிடங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

- நேர்முகத் தேர்வு அல்லாமல் கணினி வழி தேர்வு மூலமாகவே ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதி: குறைந்தபட்ச தகுதியாக 10-ஆம் வகுப்பு, ஐடிஐ உள்ளிட்ட கல்வித்தகுதி கொண்டவர்களுக்குமான பணியிடங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

பணியிடங்கள்: குரூப் சி (Level I) பிரிவில் உள்ள டிராக் மெயிண்டெய்னர், பாயிண்ட்ஸ் மேன், ஹெல்ப்பர், கேட்மேன், போர்ட்டர் மற்றும் குரூப் சி (Level II) கிரேன் டிரைவர், கார்ப்பெண்டர், ஃபிட்டர், அசிஸ்டண்ட் லோகோ பைலட்ஸ், தொழில்நுட்ப உதவியாளர்கள்

விண்ணப்பிப்பது எப்படி: இந்திய ரயில்வேயின் இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

(http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,4,1244)

வயது மற்றும் சம்பள விவரம்: குரூப் சி (Level II) பிரிவி விண்ணப்பிப்பவர்கள் 18-28 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். குரூப் சி (Level I) பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் 18-31 வயதுடையவர்களாக இருத்தல் வேண்டும். Level II பிரிவுக்கு 19,000-63,200 வரையும், Level Iக்கு 18,000- 56,900 வரையும் 7வது ஊதிய கமிஷனின் பரிந்துரைபடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: குரூப் சி (Level II) பிரிவுக்கு வீண்னப்பிக்க மார்ச் 5-ஆம் தேதியும், Level I-க்கு விண்ணப்பிக்க மார்ச் 12-ஆம் தேதியும் கடைசி நாளாகும்.

எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு ரயிலில் இலவச படுக்கை வசதி பாஸ் வழங்கப்படும்.

முக்கிய தேதிகள்:

குரூப் சி (Level II) பணியிடங்களுக்கான அறிவிக்கை - பிப்ரவரி 3

குரூப் சி (Level II)) பணியிடங்கள் விண்ணப்பிக்க துவங்கும் நாள் - பிப்ரவரி 3

விண்ணப்பிக்க கடைசி நாள் - மார்ச் 5

தேர்வு நடைபெறும் மாதம் - ஏப்ரல் - மே

குரூப் சி (Level I) பணியிடங்களுக்கான அறிவிக்கை - பிப்ரவரி 10

குரூப் சி (Level II)) பணியிடங்கள் விண்ணப்பிக்க துவங்கும் நாள் - பிப்ரவரி 10

விண்ணப்பிக்க கடைசி நாள் - மார்ச் 12

தேர்வு நடைபெறும் மாதம் - ஏப்ரல் - மே

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment