Advertisment

2017-ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை எது?

இந்த சமயத்தில் 2017-ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் கூகுளில் தேடிய 10 வார்த்தைகளின் பட்டியலை கூகுள் இந்தியா சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2017-ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை எது?

2017-ஆம் ஆண்டு முடிய இன்னும் 15 நாட்கள்தான் இருக்கிறது. இந்த சமயத்தில் 2017-ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் கூகுளில் தேடிய 10 வார்த்தைகளின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில், பாலிவுட் திரைப்படங்கள், கிரிக்கெட் ஆகியவையே அதிகம் இடம்பெற்றிருக்கின்றன.

Advertisment

1. பாகுபலி 2, தி கன்க்ளூஷன்:

ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2017-ஆம் ஆண்டு வெளியானது. ’பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்?”, என்பதுதான் இந்தாண்டில் அதிக முறை கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கும்.

publive-image

2. இந்தியன் ப்ரீமியர் லீக்:

ஐபிஎல் இரண்டாவதாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை. 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்றது.

publive-image

3. லைவ் கிரிக்கெட் ஸ்கோர்:

மூன்றாவதாக அதிகம் தேடப்பட்ட வார்த்தையும் கிரிக்கெட்டுடன் தொடர்புடையதாகவே உள்ளது.

4. தங்கல்:

இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தங்கல் திரைப்படம் மாபெரும் வெற்றியைக் கண்டது.

5. ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்ட்:

சேத்தன் பகத் நாவலான ‘ஹாஃப் கேர்ள்ஃபிரெண்ட்’டை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில், அர்ஜூன் கபூர், ஆலியா பட் நடித்துள்ளனர்.

6. பத்ரிநாத் கி துல்ஹானியா:

வருண் தவான் - ஆலியாபட் நடித்த இத்திரைப்படும் பெரும் வெற்றியை கண்டது.

publive-image

7. முன்னா மைக்கேல்:

நவாசுதீன் சித்திக், டைகர் ஷெரஃப் நடித்த இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்தது.

8. ஜக்கா ஜசூஸ்:

ரன்பீர் சிங் - கத்ரீனா கைஃப் நடித்த இந்த திரைப்படம், இந்தாண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாகும்.

9. சாம்பியன்ஸ் ட்ராஃபி:

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியும் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் இடம்பிடித்துள்ளது.

10. ராயிஸ்:

ஷாருக்கான் நடித்த ராயிஸ் திரைப்படம், அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment