Advertisment

ஆயுத படைகளில் திருநங்கைகளை சேர்க்க திட்டம்; ஆய்வுக் குழு அமைப்பு

இந்திய ஆயுதப் படைகளில் திருநங்கைகளுக்கான சாத்தியமான வேலை வாய்ப்புகள் மற்றும் அவர்கள் ஆற்றக்கூடிய பாத்திரங்கள் குறித்து ஆய்வு; குழு அமைப்பு

author-image
WebDesk
New Update
army

இந்திய ஆயுதப் படைகளில் திருநங்கைகளுக்கான சாத்தியமான வேலை வாய்ப்புகள் மற்றும் அவர்கள் ஆற்றக்கூடிய பாத்திரங்கள் குறித்து ஆய்வு; குழு அமைப்பு

Amrita Nayak Dutta

Advertisment

இந்திய ஆயுதப் படைகள் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 மற்றும் அதன் தாக்கங்களை ஆராயும் போது, திருநங்கைகளுக்கான சாத்தியமான வேலை வாய்ப்புகள் மற்றும் அவர்கள் ஆற்றக்கூடிய பாத்திரங்களை கவனத்தில் எடுத்து வருகின்றன என​​ இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு தெரியவந்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: Talks on in Armed Forces on possible entry of transgenders, study group formed

ஆகஸ்ட் மாதம் கூடிய பிறகு முதன்மை பணியாளர் அதிகாரிகள் குழுவால் (PPOC) கூட்டு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் (DGAFMS) மூத்த அதிகாரியின் தலைமையிலான குழு, சட்டத்தின் தாக்கங்கள் குறித்து ஆலோசித்து, பாதுகாப்புப் படைகளில் அதைச் செயல்படுத்துவதற்கான வழியை பரிந்துரைக்கும் பணியை மேற்கொண்டது.

PPOC மூன்று சேவைகளின் உயர் அதிகாரிகளைக் கொண்டுள்ளது மற்றும் AFMS என்பது ஆயுதப் படைகளின் முப்படை மருத்துவ அமைப்பாகும்.

இதைத் தொடர்ந்து, படையில் திருநங்கைகளைப் பணியமர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள், சாத்தியமான வேலை வாய்ப்புகள் மற்றும் இராணுவத்தில் அவர்கள் ஆற்றக்கூடிய பாத்திரங்கள் குறித்து, ராணுவ துணைத் தளபதியின் பிரிவு சமீபத்தில் அதன் இயக்குனரகங்களில் இருந்து கருத்துகளைக் கேட்டது.

ஆதாரங்களின்படி, பெரும்பாலான இயக்குனரகங்கள் ஏற்கனவே தங்கள் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளன, இது குறித்த ஆலோசனைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன.

திருநங்கைகள் ராணுவத்தில் சேர வேண்டுமென்றால் பயிற்சி, கடுமையான தேர்வுத் தரநிலைகள் அல்லது கடினமான இடங்களில் பணியமர்த்துதல் போன்றவற்றின் அடிப்படையில் திருநங்கைகளுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கக்கூடாது என்று சிலர் வலியுறுத்திய நிலையில், திருநங்கைகளின் தங்குமிட வசதி மற்றும் பிற உள்கட்டமைப்பு போன்ற நிர்வாக மற்றும் தளவாட சிக்கல்கள் குறித்து மற்றவர்கள் கருத்து தெரிவித்ததாக அறியப்படுகிறது.

திருநங்கைகள் படிப்படியாக இராணுவத்தில் சேர்க்கப்படும்போது, திருநங்கைகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள், ஏதேனும் இருந்தால், இராணுவத்தில் எவ்வாறு அடையாளம் காணப்படுவார்கள் மற்றும் மற்ற இராணுவ வீரர்களுடன் அவர்களின் கலாச்சார ஒருங்கிணைப்பு எப்படி இருக்கும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ​​இந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

இந்தச் சட்டம் திருநங்கைகளுக்கு சம வாய்ப்பு வழங்குவதாகும். இருப்பினும், பாதுகாப்புப் படைகளில் வேலைவாய்ப்பு என்பது தேர்வு மற்றும் தகுதி அடிப்படையிலானது, எனவே இது திருநங்கைகளுக்கு எந்த நேரத்திலும் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு திறக்கப்பட்டால் அவர்களுக்கு சமமாக பொருந்தும்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், எந்த முடிவும் எடுப்பதற்கு முன், வேறு பல பிரச்னைகளை கருத்தில் கொள்ள வேண்டும். இராணுவத்தை ஒரு வேலை வாய்ப்பாக மட்டும் பார்க்க முடியாது. குறிப்பாக வளங்கள் மற்றும் இடப் பற்றாக்குறை உள்ள போர் களத்தில் தங்குமிடவசதி மற்றும் கழிப்பறைகள் இல்லாதது போன்ற நிர்வாக சவால்கள் உள்ளன," என்று அதிகாரி கூறினார்.

"திருநங்கைகளை அமைதி நிலையங்களில் மட்டும் பணியமர்த்துவது, களத்தில் பணியாற்றிய பிறகு திரும்பும் மற்றவர்களுக்கு வாய்ப்புகளை குறைக்கும்" என்று அந்த அதிகாரி கூறினார்.

ஆயுதப் படைகளில் அதிக பெண்களைச் சேர்ப்பதற்கு வழி வகுத்த, ஒப்பந்த அடிப்படையிலான அக்னிவீர் ஆட்சேர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்திய பிறகு மேலும் பெரிய மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு முன் குறிப்பிட்ட கால இடைவெளி வேண்டும் மற்றும் நிறைய சிந்திக்க வேண்டும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

ஆயுதப் படைகளில் தற்போது திருநங்கைகள் யாரும் பணியில் இல்லை என்றாலும், ஆகஸ்ட் 3 அன்று ராஜ்யசபாவில் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழு அளித்த அறிக்கை, திருநங்கைகளின் ஆட்சேர்ப்பை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தும் போது, மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு பலன்களை விரிவுபடுத்துவதை உள்துறை அமைச்சகம் (MHA) பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Transgenders Indian Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment