Advertisment

ராஜஸ்தான் சென்ற ராஜ்நாத் சிங்... அணிவகுப்பு தராமல் ‘மாஸ்’கட் அடித்த போலீஸார்!

ராஜஸ்தான் மாநிலம் சென்றிருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கிற்கு, அம்மாநில காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதை தர மறுப்பு

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் வசூந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கிற்கு, அம்மாநில காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதை தர மறுத்துள்ள சம்பவம் ஆளும் பாஜக அரசுச்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அம்மாநில காவல்துறையைச் சேர்ந்த 250 பேர் திங்கள் கிழமை விடுப்பு எடுத்துள்ளனர். மேலும், பணியில் இருந்த சிலரும் ராஜ்நாத் சிங்-கிற்கு அணிவகுப்பு மரியாதை செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதாவது, சம்பளத் தொகையானது ரூ.24.000-ல் இருந்து ரூ.19000-ஆக குறைக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்திருப்பதாக வாட்ஸ்அப்-ல் வதந்தி வைரல் அடித்த்துள்ளது. இதை உண்மை என நினைத்து காவல்துறையினர் சுமார் 250 பேர் திங்கள் கிழமை விடுப்பு எடுத்துள்ளனர்.

வாட்ஸ்அப்-ல் பரவியது போலியான செய்தி என்பது பின்னர் தான் தெரியவந்தது. விடுப்பு எடுத்த போலீஸார் மீதும், அணிவகுப்பில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்த போலீஸார் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்டும் காவல்துறை உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Rajasthan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment