Advertisment

மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்கள் விடுதலை: காத்தாரில் இருந்து தாயகம் திரும்பினர்

உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தாரால் விடுவிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Qatar frees 8  Ex Indian Navy men jailed on espionage charges 7 return to India Tamil News

உளவு பார்த்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை விடுதலை செய்தது கத்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Qatar: அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அவர்கள் 8 பேரும் கத்தாரில் உளவு பார்த்ததாக கூறி, அந்நாட்டு அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 30, 2022 அன்று கைது செய்தனர். 

Advertisment

கைது செய்யப்பட்டவர்களில் கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகிய 8 பேர் ஆவர்.  அவர்கள் கத்தாரின் எமிரி கடற்படைப் படை தளத்தில் இருந்து இத்தாலிய U212 ஸ்டெல்த் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தூண்டுவதை மேற்பார்வையிட்டு வந்தனர். 

கைது செய்யப்பட்ட ஒரு வருடம் கழித்து, ஆகஸ்ட் 4, 2023 அன்று, அவர்கள் 8 பேரும் தனிமைச் சிறையில் இருந்து சிறையின் வார்டுக்கு ஒவ்வொரு அறைக்கும் இரண்டு பேர் என தங்களது சகாக்களுடன் இருக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், வழக்கு விசாரணையின் முடிவில் இந்தியர்கள் 8 பேருக்கும் கத்தார் நீதிமன்றம் அக்டோபர் 26, 2023 அன்று, மரண தண்டனை விதித்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும், 8 பேரையும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய அரசு கூறியிருந்தது. மேலும், தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு சார்பில் கத்தார் நீதிமன்றத்தில் நவம்பர் 20 அன்று மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டை  ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நவம்பர் 23ம் தேதி முதல் விசாரணையைத் தொடங்கியது. 

இதனிடையே, டிசம்பர் 01, 2023 அன்று துபாயில் நடைபெற்ற COP28 உச்சி மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியை சந்தித்துப் பேசினார். இதனைத்தொடர்ந்து, டிசம்பர் 3ம் தேதி முதல் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு தூதரக அணுகலை இந்திய தூதர் விபுலுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, டிசம்பர் 3ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்றது. 

இந்திய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து கத்தார் நீதிமன்றம் டிசம்பர் 28, 2023 அன்று, மரண தண்டனையை குறைத்தது. அந்த நேரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், மரண தண்டனை குறைக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து, 8 பேருக்கும் விடுதலை வாங்கிக் கொடுத்து பாதுகாப்புக்காக இந்தியா அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார். 

விடுதலை 

இந்த நிலையில், இந்தியாவின் இராஜதந்திர வெற்றியாக, உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தாரால் விடுவிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று திங்கள்கிழமை காலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரியும் 8 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டதை இந்திய அரசு வரவேற்கிறது. அவர்களில் 8 பேரில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்த நாட்டினரை விடுவிக்கவும் வீட்டிற்கு வரவும் கத்தார் அரசின் அமீர் எடுத்த முடிவை நாங்கள் பாராட்டுகிறோம், ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “நாங்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இந்தியா திரும்பியதில் மகிழ்ச்சியடைகிறோம். பிரதமர் மோடியின் தனிப்பட்ட தலையீடு இதை சாத்தியமாக்கியதற்கும், இதை அனுமதித்த கத்தார் அமீருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்." என்று கூறியுள்ளார்.

டெல்லி திரும்பிய மற்றொரு நபர் பேசுகையில், “பிரதமர் மோடியின் தலையீடு இல்லாமல் இது சாத்தியமில்லை. உயர் மட்டத்தில் தலையீடு மற்றும் இந்திய அரசின் இடைவிடாத முயற்சிகள் இல்லாவிட்டால் நாங்கள் உங்கள் முன் நிற்க மாட்டோம்." என்று கூறியுள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Qatar frees 8 ex-Indian Navy men jailed on espionage charges, 7 return to India

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Qatar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment