Advertisment

நாட்டின் 20 பல்கலைக்கழகங்களை உலக தரமாக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு - பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவில் உள்ள 10 தனியார் மற்றும் 10 அரசு பல்கலைக்கழகங்களை தேர்வு செய்து, அவற்றினை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாட்டின் 20 பல்கலைக்கழகங்களை உலக தரமாக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு - பிரதமர் மோடி அறிவிப்பு

நாட்டின் 20 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களாக மாற்றப்படுமே என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்காக ரூ.10,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisment

நாட்டின் 7-வது பல்கலைக்கழகமான பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகார் வந்தார். அவரை பாட்னா விமான நிலையத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்றார்.

அதைதொடர்ந்து பாட்னாவில் புதிதாக திறக்கப்பட்ட பீகார் அருங்காட்சியகத்துக்கு செல்ல பிரதமர் மோடி விரும்பினார். அவரை முதல்வர் நிதிஷ்குமார் அழைத்துச் சென்று சுற்றி காண்பித்தார். அங்கு அவருக்கு கவர்னர் சத்யபால் மாலிக் புத்தகம் ஒன்றை பரிசளித்தார்.

அதன்பின்னர் பாட்னா பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பேசுகையில், "பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் முதல்வர் நிதிஷ்குமாரின் பணி பாராட்டுக்கு உரியது. இந்தியாவின் கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2022-ல் இந்தியா 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது, வளமான மாநிலங்கள் பட்டியலில் பீகாரும் இருக்க வேண்டும். இதற்காக மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து பணியாற்றும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாட்னா பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக சிறந்து விளங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் உள்ள 10 தனியார் மற்றும் 10 அரசு பல்கலைக்கழகங்களை தேர்வு செய்து, அவற்றினை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகையானது அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு பிரித்து அளிக்கப்படும். இதைப் பயன்படுத்திக் கொண்டு, அவை தங்களை உலக தரம் வாய்ந்த அளவிற்கு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய மோடி, " இந்த 20 பல்கலைக்கழகங்களும் ஒரு சவாலை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படும். அதில் அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும். வரலாறு, செயல்திறன் மற்றும் உலகளாவிய வரையறைகளை அடைய அவை வைத்திருக்கும் தொலைநோக்கு திட்டம் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்கப்படும். முதன்முறயாக ஐஐஎம்-கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இது அவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாகும்" என்று தெரிவித்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment