Advertisment

மன்மோகனுக்கு ஏற்பட்ட பயம்... ஒபாமா புத்தகத்தில் புதிய தகவல்

முஸ்லீம்-விரோத உணர்வு அதிகரித்து வருவது இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) செல்வாக்கை பலப்படுத்தியதாக அவர் அஞ்சினார்.

author-image
WebDesk
New Update
மன்மோகனுக்கு ஏற்பட்ட பயம்... ஒபாமா புத்தகத்தில் புதிய தகவல்

Shubhajit Roy 

Advertisment

Obama in his memoir Dr Singh looked frail I wondered what would happen when he left office :  26/11 தாக்குதல்களுக்குப் பிறகு மன்மோகன் சிங் பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும் என்கின்ற அழைப்பை புறக்கணித்துவிட்டார். அரசியல் ரீதியாக அது மன்மோகனுக்கு பின்விளைவை ஏற்படுத்தியது. மேலும் பாரக் ஒபாமாவிடம் தொடர்ந்து எழுந்து வரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வு பாஜகவை வலுப்படுத்துகிறது என்ற அச்சத்தையும் தெரிவித்தார்.

அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒபாமாவின் புத்தகமான ஏ ப்ரோமிஸ்ட் லேண்டின் (A promised land) முதல் தொகுதியில் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்த பாரக் ஒபாமா மன்மோகன் சிங்குடனான தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

"முஸ்லீம்-விரோத உணர்வு அதிகரித்து வருவது இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) செல்வாக்கை பலப்படுத்தியதாக அவர் அஞ்சினார். நிச்சயமற்ற காலங்களில்,மத மற்றும் இன ஒற்றுமையின் அழைப்பு போதைப்பொருளாக இருக்கலாம். இந்தியாவிலோ அல்லது வேறு எங்கும் அரசியல்வாதிகள் அதைப் பயன்படுத்திக் கொள்வது அவ்வளவு கடினம் அல்ல என்று மன்மோகன் சிங் எழுதியதாக தன்னுடைய நினைவுக் குறிப்பில் குறிப்பிட்டார் ஒபாமா.

To read this article in English

சிங் மிகவும் புத்திசாலியாகவும், சிந்தனை மிக்கவராகவும், நேர்மையானவராகவும் இருந்தார். நானும் சிங்கும் ஒரு நல்ல உறவை வளர்த்துக் கொண்டோம். வெளியுறவுக் கொள்கைகளின் போது அவர் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்திருக்கலாம். அமெரிக்காவின் நோக்கங்களை வரலாற்று ரீதியாக சந்தேகிக்கும் ஒரு இந்திய அதிகாரத்துவத்தை விட்டு வெகுதூரம் வெளியேற விரும்பவில்லை என்றாலும், அசாதாரணமான ஞானமும் ஒழுக்கமும் கொண்ட மனிதர் என்ற எனது ஆரம்ப எண்ணத்தை நாங்கள் ஒன்றாக கழித்த காலம் உறுதிப்படுத்தியது. சிங் அதிகாரத்திற்கு வந்திருப்பது இந்நாட்டின் எதிர்கால ஜனநாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா அல்லது வெறுமனே மாறுபடுவதா என்று மட்டும் என்னால் கூற இயலவில்லை என்று ஒபாமா கூறியுள்ளார்.

“உண்மையில், அவர் தனது பதவிக்கு சோனியா காந்திக்கு கடமைப்பட்டிருக்கிறார்… ஒன்றுக்கும் மேற்பட்ட அரசியல் பார்வையாளர்கள் அவர் சிங்கைத் தேர்ந்தெடுப்பார் என்று நம்பினார்கள். ஏனெனில் ஒரு அரசியல் பின்புலம் இல்லாத ஒரு வயதான சீக்கியராக, தனது நாற்பது வயது மகனுக்கு எந்த அச்சுறுத்தலையும் முன்வைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்ற அவரை கூர் தீட்டிக் கொண்டிருந்தார் சோனார்.

60-ல் இருக்கும், பாரம்பரிய உடை அணிந்திருக்கும், ஆராயும் கரு நிற கண்களை கொண்டு அமைதியாக, ஆட்சி மிக்க இருப்பை கொண்டிருக்கும் பெண் சோனியா என்று கூறுகிறார் ஒபாமா. “அன்றைய இரவு உணவின் போது சோனியா பேசியதைக் காட்டிலும் அதிகம் கேட்டார். கொள்கை விசயங்களை மன்மோகனிடம் ஒத்திவைத்தார். இடையிடையே தன் மகனை உரையாடலில் கலந்து கொள்ளுமாறு தூண்டினார். ஆனால் அவருடைய அதிகாரம் விவேகம் மற்றும் வலிமையான புத்திசாலிதனத்தின் காரணமாக தோன்றியது என்பது தெளிவாகிறது. ராகுல் மிகவும் புத்திசாலியாகவும் ஆர்வமுள்ளவராகவும் தோன்றினார். அவரது தோற்றம் அவருடைய அம்மாவிடம் இருந்து வந்தது என்று எழுதியுள்ளார் ஒபாமா.

"முற்போக்கான அரசியலின் எதிர்காலம் குறித்த தனது எண்ணங்களை அவர் முன்வைத்தார், அவ்வப்போது எனது 2008 பிரச்சாரத்தின் விவரங்கள் குறித்து என்னை விசாரிக்க இடைநிறுத்தினார். ஆனால் அவரிடம் ஒரு பதட்டமான, வடிவமைக்கப்படாத ஒரு தரம் இருந்தது. பாடங்களை முடித்துவிட்டு ஆசிரியரை கவர ஆர்வமாக இருக்கும் மாணவனை போல இருந்தார். ஆனால் அந்த பாடத்தில் ஆழமாக முழுமனதுடன் இறங்கும் தகுதியும் ஆர்வமும் அவரிடம் இல்லை.

"தாமதமாகிவிட்டதால், சிங் தூக்கத்தை எதிர்த்துப் போராடுவதை நான் கவனித்தேன், ஒவ்வொரு முறையும் தனது கண்ணாடியைத் தூக்கிக் கொண்டிருந்தார். தூக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார்.நாம் விடைபெற வேண்டிய நேரம் இது என்று நான் மிச்சேலுக்கு சமிக்ஞை செய்தேன் என்று எழுதியுள்ளார் பாரக் ஒபாமா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

சிங் மற்றும் மனைவி அவர்களது காரை நோக்கி அழைத்துச் செல்லும்போது, “மங்கலான வெளிச்சத்தில், அவர் தனது எழுபத்தெட்டு வயதை விட வயதானவராக இருந்தார், நாங்கள் வெளியேறும்போது அவர் பதவியை விட்டு வெளியேறும்போது என்ன நடக்கும் என்று யோசித்தேன். ராகுலுக்கு இந்த குழு வெற்றிகரமாக அனுப்பப்படுமா, அவரது தாயார் விதித்த விதியை பூர்த்திசெய்து, பாஜக கூறும் பிளவுபடுத்தும் தேசியவாதத்தை தாண்டி காங்கிரஸ் கட்சி தன் அதிகாரத்தை காத்துக்கொள்ளுமா? என்று யோசித்ததாக எழுதியுள்ளார் ஒபாமா.

ஆனால், எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது எதுவும் சிங்கின் தவறு இல்லை. பனிப்போருக்குப் பிந்தைய உலகெங்கிலும் உள்ள தாராளமய ஜனநாயக வரலாற்றில் தன்னுடைய பங்களிப்பை சிங் கொடுத்துள்ளார்.

"வன்முறை, பேராசை, ஊழல், தேசியவாதம், இனவெறி, மற்றும் மத சகிப்பின்மை ஆகியவற்றின் தூண்டுதல்கள், நம்முடைய நிச்சயமற்ற தன்மை மற்றும் இறப்பு மற்றும் மற்றவர்களை அடிபணியச் செய்வதன் மூலம் முக்கியத்துவமின்மை ஆகியவற்றைத் தோற்கடிப்பதற்கான அனைத்து மனித விருப்பங்களும் எந்தவொரு ஜனநாயகத்தாலும் கட்டுப்படுத்த மிகவும் வலிமையானதாக இருக்கிறது என்பதை நான் இப்போது அறிகிறேன். ஏனென்றால், அவர்கள் எல்லா இடங்களிலும் காத்திருப்பதாகத் தோன்றியது, வளர்ச்சி விகிதங்கள் ஸ்தம்பிக்கும்போதோ அல்லது புள்ளிவிவரங்கள் மாறும்போதோ அல்லது ஒரு கவர்ந்திழுக்கும் தலைவர் மக்களின் அச்சங்கள் மற்றும் மனக்கசப்புகளின் அலைகளை சவாரி செய்யத் திரும்பும்போதெல்லாம் மீண்டும் தோன்றத் தயாராக இருக்கின்றன. இல்லையெனில் நான் விரும்பியபடி, அத்தகைய தூண்டுதல்களைத் தடுக்க நான் என்ன செய்ய முடியும் என்று என்னிடம் சொல்ல அன்று மகாத்மா காந்தி இல்லை, "என்று அவர் தனது இந்தியா பிரிவை முடிக்கும் போது எழுதியுள்ளார்.

மேலும் படிக்க : ”அதிபராக போட்டியிட வேண்டாம்” ஒபாமாவிடம் சண்டையிட்ட மிச்சேல்!

இந்த 768 பக்க நினைவு குறிப்பு புத்தகத்தின் முதல் தொகுதி 2011-உடன் நின்று விடுகிறது. இதில் மோடி குறித்து எங்கும் குறிப்பிடவில்லை. 2014ம் ஆண்டு தான் அவர்கள் இருவரும் சந்திக்கின்றனர். அவருடைய இரண்டாவது பாகத்தில் இவ்விரு நபர்களின் சந்திப்பு குறித்து இடம் பெறலாம்.

அக்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் 2011ம் ஆண்டு மே மாதம் கொல்லப்பட்டது குறித்த அபோட்டாபாத் தாக்குதல் குறித்து விரிவாக எழுதுகிறார் ஒபாமா. ஐ.எஸ்.ஐ. தாலிபான் மற்றும் அல் கொய்தாவுடன் தொடர்பு கொண்டுள்ளது என்ற பாகிஸ்தானின் வெளிப்படையான ரகசியம் பற்றியும் அவர் எழுதியுள்ளார். எதிர்தீவிரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசு உதவினாலும், ஆப்கானிஸ்தானில் எங்கள் படைகளுக்கு ஒரு முக்கிய விநியோக பாதையை வழங்கியிருந்தாலும், நாட்டின் இராணுவத்திற்குள் உள்ள சில கூறுகள், குறிப்பாக அதன் உளவுத்துறை சேவைகள் தாலிபான் மற்றும் அல்கொய்தாவுடன் தொடர்பில் இருக்கத்தான் செய்தன. சில நேரங்களில் ஆப்கான் அரசை பலவீனமாக வைத்திருக்கவும், பாகிஸ்தானின் முதல் போட்டியாளரான இந்தியாவுடன் தொடர்பு கொள்ளாத வகையிலும் இருப்பதை உறுதி செய்ய தீவிரவாத குழுக்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது.

பாகிஸ்தானின் வெஸ்ட் பாய்ண்ட் ராணுவ முகாமிற்கு சமமாக சில மைல்கள் தொலைவில் தான் அமைந்திருந்தது அபோட்டாபாத் சுவர். பாகிஸ்தானியர்களிடம் நாங்கள் கூறியது எதையும் எங்கள் இலக்கைத் தப்பிக்க வைக்க போதுமானதாக இருப்பதற்கான சாத்தியத்தை உயர்த்தியது.

ஒசாமா பின்லேடனைக் கொன்ற வெற்றிகரமான தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியுடன் மிகக் குறைவான விரோதமான தொலைபேசி உரையாடலைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டதாக தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார் ஒபாமா.

நான் பாகிஸ்தான் அதிபர் அசிஃப் அலி சர்தாரியிடம் இருந்து ஒரு மோசமான அழைப்பினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பாகிஸ்தானின் இறையாமையை நாங்கள் மீறிவிட்டதற்காக அவர் தன்னுடைய நாட்டில் விமர்சனங்களை நிச்சயமாக சந்தித்திருப்பார். நான் அவரிடம் பேசிய போது அவர் முதலில் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார். வீழ்ச்சி எதுவாக இருந்தாலும் அது நல்ல செய்தி தான் என்று அவர் கூறினார். அவர் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தினார். அவருடைய மனைவி பெனாசீர் பூட்டோ எவ்வாறு அல்கொய்தாவுடன் தொடர்பில் இருக்கும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் என்பதையும் நினைவு கூர்ந்தார் அவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Barack Obama
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment