Advertisment

"மனைவியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்வது குற்றமல்ல”: சுஷ்மா கணவர் சர்ச்சை கருத்து

”திருமணத்திற்கு பிறகு கட்டாய உறவு (Marital Rape) என்ற ஒன்றெல்லாம் இல்லை. இதை குற்றமாக்கினால், நமது குடும்பங்கள் காவல் நிலையங்களாக மாறக்கூடாது.”

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
"மனைவியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்வது குற்றமல்ல”: சுஷ்மா கணவர் சர்ச்சை கருத்து

திருமணத்திற்கு பிறகு தன் மனைவியின் விருப்பமின்றி கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்வது குற்றமல்ல என, இதுதொடர்பான வழக்கு ஒன்றில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்தது. இது, பெண்களை அடிமைப்படுத்துவது போல் உள்ளது என, பல பெண் அமைப்புகள், பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கணவரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ஆளுநருமான ஸ்வராஜ் கௌஷல், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த பதிலை ஆதரிக்கும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். திருமணத்திற்கு பிறகு மனைவியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்வது குற்றமல்ல என்று கூறும் விதமாக அமைந்தது. இதனால், ஸ்வராஜ் கௌஷல் பதிவுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அந்த பதிவில், ”திருமணத்திற்கு பிறகு கட்டாய உறவு (Marital Rape) என்ற ஒன்றெல்லாம் இல்லை. இதை குற்றமாக்கினால், நமது குடும்பங்கள் காவல் நிலையங்களாக மாறக்கூடாது.”, என பதிவிட்டார்.

மேலும், ”இதனை குற்றமாக்கினால், வீடுகளை விட சிறைச்சாலைகளிலேயே அதிக கணவர்கள் இருக்க நேரிடும்”, என பதிவிட்டார். இதற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

publive-image

publive-image

ஸ்வராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவதை தன்னை பின்தொடர்பவர்கள் தவிர்த்து மற்றவர்கள் பார்க்காத வகையில், பாதுகாப்பு அமைப்புகளை மாற்றியுள்ளார். இருப்பினும், அவருடைய பதிவை மற்றவர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Supreme Court Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment