Advertisment

ஜி.எஸ்.டி வரிகுறைப்பால் தீபாவளி பண்டிகை முன்கூட்டியே வந்துவிட்டது: குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஜி.எஸ்.டி-யில் மாற்றம் கொண்டு வந்ததன் மூலம் முன்னதாகவே தீபாவளி பண்டிகை வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜி.எஸ்.டி வரிகுறைப்பால் தீபாவளி பண்டிகை முன்கூட்டியே வந்துவிட்டது:  குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஜி.எஸ்.டி-யில் மாற்றம் கொண்டு வந்ததன் மூலம் மக்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னதாக வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும் செய்கிறார். தேர்தலை எதிர்நோக்கியுள்ள குஜாராத் மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி ஒரே மாதத்தில் 2-வது முறையாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

Advertisment

துவார்காதீஷ் கோயிலில் வழிபாட்டுடன் இந்த பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள பழைய துவார்கா நகரையும் புதியாக புதிய துவார்கா நகரையும் இணைக்கும் வகையில் 2.32 கி.மீ நீளத்தில் தொங்கும் பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடி கூட்டத்தில் அங்கு உரையாற்றும் போது: 27 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பால் மக்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னதாகவே வந்துவிட்டது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தொடர் நடவடிக்கையை எடுத்து வருகிறது. எந்த பெற்றோரும் தங்களது குழந்தைகளை வறுமையில் வாழ வேண்டும் என விரும்ப மாட்டார்கள். எனவே,வறுமைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மக்களின் கனவுகளை பூர்த்தி செய்வதே அரசின் நோக்கம். உலக நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்த்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இவை மக்களுக்கு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

PM Narendra Modi, Gujarat, Diwali, GST,

இதனிடையே, சோடிலாவில் நடைபெற்ற கூட்டத்தில் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜி பேசும்போது: கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் 70 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது ஒரு ஆண்டில் 30 விமான நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

சோடிலாவில் ரூ.2,500 கோடி மதிப்பில் விமான நிலையம் அமைக்கும் திட்டம், போர்பந்தர்-துவாரகா நெடுஞ்சாலை திட்டம் ஆகியவற்றிற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். குடிநீர் விநியோக திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் மோடி தொடங்கிவைத்தார். சோடிலாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் போது: இப்பகுதியில் விமான நிலையம் வரும் என்று மக்கள் என்றாவது எதிர்பார்த்ததுண்டா? இதுபோன்ற வளர்சி இப்பகுதி காணும் என நினைத்ததுண்டா? சிலருக்கு இங்கு விமான நிலையம் அமைக்கும் திட்டம் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பேருந்தில் பயணம் செய்ய விரும்புவார்கள். விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு விவசாய நிலங்கள் 4 சதவீதம் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. மற்ற 96 சதவீத நிலம் விவசாய நிலங்கள் இல்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. சர்வதேச விமானங்கள் இப்பகுதியில் இருந்து புறப்பட்டுச் செல்லும் நிகழ்வை விரைவில் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று பேசினார்.

Gujarat Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment