Advertisment

3-வது கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நிறைவு- ஆதிக்கம் செலுத்திய அரசியலமைப்பு, இட ஒதுக்கீடு விவாதம்

ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரத்தின் இறுதி மணிநேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியும் பிஜேபியும் காங்கிரஸ் மற்றும் அதன் இண்டியா கூட்டணி மீதான தாக்குதலை முடுக்கி விட்டார்கள், அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களும் சம அளவில் பதிலடி கொடுத்தனர்.

author-image
WebDesk
New Update
Lok Sabha polls Phase

Lok Sabha polls: Constitution, quota at centre stage, Phase 3 campaign for 93 seats ends

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைந்தது. இங்கு நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Advertisment

2019 ஆம் ஆண்டை விட முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவில் சரிவை பதிவு செய்துள்ள நிலையில், மூன்றாம் கட்டம் இந்த போக்கை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், குஜராத்தில் உள்ள சூரத்தில் பாஜக ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது, மேலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்-ரஜோரி தொகுதிக்கான தேர்தல் மே 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக நடைபெறவிருந்த மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணமடைந்ததைத் தொடர்ந்து மே 7 ஆம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரத்தின் இறுதி மணிநேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியும் பிஜேபியும் காங்கிரஸ் மற்றும் அதன் இண்டியா கூட்டணி மீதான தாக்குதலை முடுக்கி விட்டார்கள், அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களும் சம அளவில் பதிலடி கொடுத்தனர்.

Modi ayodhya

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வழிபாடு நடத்தி, ரோட்ஷோ நடத்திய மோடி, உத்தரபிரதேசத்தில் நடந்த பேரணிகளில் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸின் "வம்ச அரசியலை" கடுமையாக சாடினார்.

அவர்களின் தலைவர்கள் தங்கள் சொந்த குடும்பங்களுக்கு மட்டுமே பயனளிக்க உழைக்கும் அதே வேளையில், அவர் வரும் தலைமுறைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதாக கூறினார்.

தன்னையும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் குறிப்பிட்டு, எங்களுக்கு குழந்தைகள் இல்லை. உங்கள் குழந்தைகளுக்காக நாங்கள் உழைக்கிறோம், என்றார்.

காங்கிரஸ் தனது முஸ்லிம் வாக்கு வங்கிக்காக, ஒரு ஒதுக்கீட்டை உருவாக்க விரும்புகிறது. கர்நாடகாவில் செய்ததையே அவர்கள் (காங்கிரஸ்) இப்போது நாடு முழுவதும் செய்ய விரும்புகிறார்கள். மதத்தின் அடிப்படையில் எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள், என்றார்.

தெலுங்கானாவில், அடிலாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நிர்மலில் நடைபெற்ற பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் என்று தனது குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

Rahul campaing

நரேந்திர மோடிஜி இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர். அவர் உங்களிடமிருந்து இட ஒதுக்கீட்டைப் பறிக்க விரும்புகிறார். 50 சதவீதத்தில் இருந்து இடஒதுக்கீட்டை அதிகரிப்பதுதான் நாட்டின் முன் உள்ள மிகப்பெரிய பிரச்சினை.

தற்போது நடைபெற்று வரும் பொதுத் தேர்தல்கள் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையில் உள்ளன. அதில் காங்கிரஸ் அரசியலமைப்பைப் பாதுகாக்க முயற்சிக்கிறது, அதே நேரத்தில் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி அதையும் மக்களின் உரிமைகளையும் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றன.

தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றால், அரசியல் சட்டத்தை மாற்றி முடித்துவிடுவோம் என்று பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். இடஒதுக்கீடு முடிவுக்கு வந்தால், அரசியலமைப்புச் சட்டம் காணாமல் போய்விடும். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் பிற்படுத்தப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது”, என்றார்.

மூன்றாம் கட்டப் பிரச்சாரத்தில் இடஒதுக்கீடு பிரச்சினை ஆதிக்கம் செலுத்தியது.

பிஜேபி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற விரும்புகிறது, அதனால் அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யலாம் மற்றும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளின் இடஒதுக்கீடு சலுகைகளைப் பறிக்கும், என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தன.

இதற்கு பதில் அளித்த மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி ஒதுக்கீட்டை அதன் "முஸ்லிம் வாக்கு வங்கிக்கு" மாற்றிவிடும் என்றார்

காங்கிரஸ், அதன் பங்கில், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் ஓபிசிகளுக்கு நீதி வழங்குவதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தொடர்ந்து வாக்குறுதி அளித்தது.

செவ்வாய்கிழமை மாலைக்குள், 280 தொகுதிகளுக்கு மேல் தேர்தல் நடைபெறும், அதாவது மக்களவையின் மொத்த இடங்களில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகள் முடிவு செய்யப்படும்.

சத்தீஸ்கரில் மீதமுள்ள ஏழு இடங்களும், கர்நாடகாவில் 14 இடங்களுடன் குஜராத்தில் மீதமுள்ள 25 தொகுதிகளுக்கும் (சூரத் தவிர) செவ்வாய்க்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் மூலம் இந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடையும். ராஜஸ்தான், கேரளா மற்றும் தமிழகத்திலும் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.

அஸ்ஸாமில் 4, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 7, மத்தியப் பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தரப் பிரதேசத்தில் 10, மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா போட்டியிடும் காந்திநகர்; பாராமதி, சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே அவரது மருமகன் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரை எதிர்கொள்ளும் பாராமதி தொகுதி; மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ள விதிஷா; குணா (ஜோதிராதித்ய சிந்தியா), தர்வாட் (பிரலாத் ஜோஷி), ஹவேரி (பசவ்ராஜ் பொம்மை) மற்றும் துப்ரி (பத்ருதீன் அஜ்மல்) இதில் சில முக்கிய இடங்கள்.

கடந்த சில நாட்களாக பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கு முக்கிய இடத்தை பிடித்துள்ள கர்நாடகாவில், ஜேடி(எஸ்) பாஜகவின் கூட்டணியாக இருப்பதால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இந்த வழக்கு தொடர்பாக மோடியையும் அவரது கட்சியையும் குறிவைத்தனர்.

முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்டுள்ள சரிவு எதைக் குறிக்கிறது என்ற ஊகங்களுக்கு மத்தியில் மூன்றாம் கட்ட தேர்தல் வருகிறது. முதல் கட்டத்தில் வாக்களித்த 102 இடங்களில் 66.14% வாக்குகள் பதிவாகியுள்ளன, ங்கு 2019 இல் சுமார் 70% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளில் 66.71% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Read in English: Lok Sabha polls: Constitution, quota at centre stage, Phase 3 campaign for 93 seats ends

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Bjp Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment