Advertisment

கர்நாடகா தேர்தல் 2018 : மோடியின் கோவில் விசிட்டை குறை கூறிய காங்கிரஸ்!

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 15ம் தேதி நடைபெறும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karnataka Assmebly Election 2018 Live Updatates

Karnataka Assmebly Election 2018 Live Updatates

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது.

Advertisment

கர்நாடகாவில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பா.ஜ.க, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. 3 முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தாலும் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல் நடைபெறும் 222 தொகுதிகளிலும் சுமார் 2,600 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 15ந்தேதி எண்ணப்படுகின்றன.

கர்நாடகா சட்டசபை தேர்தல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள். LIVE UPDATE:

மாலை 5.00 : இறுதியாக 71.5 சதவிகித வாக்குகள் பதிவாகின.

மாலை 3.30 : மாலை 3 மணி நிலவரப்படி, கர்நாடகாவில் 56 சதவிகித வாக்குகள் பதிவானது. கடும் வெயில் காரணமாக எதிர்பார்ப்பைவிட வாக்குப் பதிவு குறைந்திருப்பதாக கருதப்படுகிறது.

பிற்பகல் 2.55 : கர்நாடக முதல்வர் சித்தராமையா வாக்களித்த பிறகு நிருபர்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் மீண்டும் மெஜாரிட்டி பலம் பெற்று ஆட்சி அமைக்கும். எடியூரப்பா அடுத்த அரசை அமைப்போம் என கூறுவது, அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

காங்கிரஸ் அபிமானிகளுக்கு எதிராக வருமான வரித்துறையை ஏவி விட்டிருக்கிறார்கள். பாஜக தோற்க இருப்பதையே இது உணர்த்துகிறது. 60 முதல் 65 இடங்களுக்கு மேல் பாஜக.வால் பிடிக்க முடியாது.’ என்றார் அவர்.

பிற்பகல் 2.30 : பகல் 1 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சராசரியாக 37 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. மாவட்டம் வாரியாக பதிவான வாக்கு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

Karnataka Assmebly Election 2018 Karnataka Assmebly Election 2018: பகல் 1 மணி நிலவரப்படி மாவட்டம் வாரியாக வாக்கு சதவிகிதம்

பகல் 1.30 : ஹம்பி நகர் வாக்குச்சாவடியில் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு பாஜக கவுன்சிலர் ஒருவரை காங்கிரஸார் தாக்கியதாகவும், அதைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

பெங்களூரு போலீஸ் துணை ஆணையர் ரவி சன்னவர் இது குறித்து கூறுகையில், ‘இந்த மோதல் குறித்து விசாரணை நடக்கிறது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். விஜயநகர் பாஜக வேட்பாளர் ரவிந்திரா கூறுகையில், ‘எங்கள் கவுன்சிலர் ஆனந்தை காங்கிரஸ் கட்சியினர் தாக்கினர். ஆனால் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றார்.

பகல் 12.30 : பிரதமர் நரேந்திர மோடி இன்று நேபாளம் சுற்றுப்பயணத்தில் பிரசித்திபெற்ற முக்திநாத் ஆலயம் சென்று தரிசித்தார். ‘கர்நாடக தேர்தல் நடைபெறும் வேளையில் இது வாக்காளர்களை கவர்வதற்கான தந்திரம். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல’ என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக் கெலாட் கூறினார்.

பகல் 11.45 : மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முதல்வர் வேட்பாளரான குமாரசாமி, ‘ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் நம்பரை நாங்கள் பிடிப்போம்’ என்றார்.

பகல் 11.30 : பகல் 11 மணி நிலவரப்படி கர்நாடகாவில் 24 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

காலை 10.45 : பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தனது வாக்கை பதிவு செய்தார். கர்நாடகாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மக்கள் தங்கள் பங்களிப்பை செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

காலை 10.15 : எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சில இடங்களில் வாக்குப் பதிவு தாமதமானது. குறிப்பாக பொம்மனஹல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜே.பி.நகர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால், வாக்காளர்கள் நீண்ட கியூவில் காத்து நின்றனர்.

Karnataka Assmebly Election 2018 Live Updatates Karnataka Assmebly Election 2018 Live Updatates : ஜே.பி.நகர் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள்

காலை 10.00 : காலை 9 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சராசரியாக 10.6 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

காலை 9.00 : முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவகவுடா, ஹாசன் மாவட்டத்தில் வாக்களித்தார். ‘நாங்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கிறேன்’ என செய்தியாளர்களிடம் தேவகவுடா தெரிவித்தார்.

காலை 8.30 மணி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கார்நாடகா தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும். அது ஜனநாயகத்துக்கு நல்லது என்று சொல்லியுள்ளார்.

காலை 7.25 மணி : பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியுரப்பா வாக்களித்துவிட்டு வெளியே வந்த போது பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது, ‘’பாஜக 150 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும்’’ என்று கூறினார்.

karnataka polling கர்நாடகா சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் கேட்டு நிற்கும் வாக்காளர்கள்...

காலை 7.20 மணி : வாக்களித்துவிட்டு வெளியே வந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பேசும் போது, ‘கடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதற்கு காரணம், சித்தாராமையா ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டனர்’’ என்றார்.

காலை 7.00 மணி : வாக்குப் பதிவு தொடங்கியது. பா.ஜ.க.வின் முதல் அமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா ஷிமோகா அருகே ஷிகர்பூரில் வாக்களித்து உள்ளார். மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் முதல் அமைச்சரான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்து உள்ளார்.

காலை 6.25 மணி : கர்நாடகா தேர்தலில் அதிகமானோர் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடகா தேர்தலுக்குப் பின் என்ன நடக்கும்?

Siddaramaiah Karnataka Election Karnataka State
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment