2017 குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் பட்டியலின இளம் தலைவர் ஜிக்னேஷ் மேவானி. அப்போது அவர் சுயேச்சையாக நின்று வட்கம் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்று, நாடு முழுக்க கவனம் ஈர்த்தார்.
இந்த நிலையில் தற்போது இவர் காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார். தொழில்முறை வழக்குரைஞரான இவர், குஜராத் மாநிலத்தில் பெற்ற அரசியல் வெற்றி இவருக்கு பெரும் அரசியல் செல்வாக்கை பெற்று கொடுத்தது.
இவரும் பட்டிதார் (பட்டேல்) சமூக போராளியுமான ஹர்திக் பட்டேலும் அரசியலில் ஒரு ரவுண்ட் வந்தனர். தற்போது இருவரும் எதிரெதிர் கூடாரத்தில் காணப்படுகின்றனர்.
ஹர்திக் பட்டேல் பாஜகவில் உள்ளார். இந்நிலையில் ஜிக்னேஷ் மேவானியின் சொத்து விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, ஜிக்னேஷ் மேவானிக்கு அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை. அவரிடம் ரொக்கம், வங்கி வைப்புத் தொகை என ரூ.35 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
எனினும் அவரிடம் தங்க நகைகளோ, சொந்தமாக காரோ இல்லை. அதேபோல் எவ்வித கடனும் இல்லை. எனினும் அவர் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரு வழக்குகளில் அவர் தண்டிக்கப்பட்டும் உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil