Advertisment

இந்தியாவில் பெண்களின் நிலைமையை தோலுரித்துக் காட்டிய சர்வதேச அறிக்கை: சீனா, வங்கதேசத்தைவிட மோசம்

பெண்களின் பங்கு மற்றும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியமே இதற்கு காரணம் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
health, women in politics, indian women, economics,

2017-ஆம் ஆண்டுக்கான சர்வதேச பாலின இடைவெளி அறிக்கையை உலக பொருளாதார கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. இதில், இந்தியா 21 இடங்கள் பின்தள்ளி 108-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அண்டை நாடுகளான சீனா, வங்கதேசத்தைவிட இந்தியா பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு மற்றும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியமே இதற்கு காரணம் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Advertisment

சமூகம், பொருளாதாரம், அறிவுடைமை, கலாச்சாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் தன் தேவைகளை நிறைவேற்றுவதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் இடைவெளியே பாலின இடைவெளி எனப்படுகிறது. இதற்காக, 144 நாடுகள் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் இந்த நாடுகளில் சமநிலை எந்தளவுக்கு எட்டப்பட்டுள்ளன என்பது குறித்து, உலக பொருளாதார கூட்டமைப்பு ஆய்வு மேற்கொண்டது.

2016-ஆம் ஆண்டு இந்தியா, 87-வது இடத்தை பிடித்தது.

ஆனால், 2017-ஆம் ஆண்டில் 21 இடங்கள் பின்தங்கி 108-வது இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம், பாலின சமநிலையை இந்தியா 67 சதவீதம் அடைந்திருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. ஆனால், இது அண்டை நாடுகளான வங்க தேசம் (47வது இடம்), சீனா (100 வது இடம்) ஆகிய நாடுகளைவிட குறைவான விகிதத்தையே பெற்றிருப்பதாக அந்த ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது.

எவற்றில் இந்தியா பின்தங்கியது?

பெண்களின் பொருளாதார பங்களிப்பு மற்றும் பெண்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றில், இந்தியா 139-வது இடத்தில் உள்ளது. “இந்தியாவில், சராசரியாக 66 சதவீத பெண்களின் உழைப்புக்கு ஊதியம் தரப்படுவதில்லை. இதனை ஒப்பிடுகையில், ஆண்களுக்கு இந்த விகித, 12 சதவீதமாக உள்ளது.”, என அறிக்கை கூறுகிறது

அதேபோல், சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்வதற்கான காரணிகளிலும் இந்தியா மோசமான நிலைமையில் உள்ளது. இந்த காரணிகளில், இந்தியா 141-வது இடத்தில் உள்ளது. அதாவது, உலகளவில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

அரசியல் அதிகாரத்துவம், ஆயுட்காலம், அடிப்படை கல்வி ஆகியவற்றில் இந்தியாவின் பாலின இடைவெளி மிக மோசமான இடத்தை பிடித்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment