Advertisment

குஜராத் தேர்தல்: முதல் 77 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதல் 77 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gujarat Election 2017, Gujarat congress Candidate List,

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதல் 77 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது.

Advertisment

182 தொகுதிகள் அடங்கிய குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 18-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் முதல் 70 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை கடந்த 17-ஆம் தேதி பாஜக வெளியிட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியும் விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடும் முதல் 77 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது.

படேல் சமூகத்தினருக்காக போராடி வரும் பத்திதார் அண்டோலன் அனாமத் சமிதின் அமைப்பை சேர்ந்த மூன்று பேருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மூன்று முஸ்லிம்கள் மற்றும் இரண்டு பெண்களுக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 14 பேருக்கு இத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment