Advertisment

தாஜ்மஹால்: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்தாண்டைவிட 20% அதிகரிப்பு

கடந்த 2016-ஆம் ஆண்டைவிட 2017-ஆம் ஆண்டில் தாஜ்மஹாலுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
tajmahal, CM yogi adityanath, uttarpradesh, BJP

தாஜ்மஹால் முகலாய கட்டட கலைக்கு இந்தியாவில் சிறந்த சான்றாக விளங்குகிறது. ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலுக்கு பின் பல்லாயிரக்கணக்கிலான தொழிலாளர்களின் உழைப்பு அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட தாஜ்மஹாலை உத்தரபிரதேச மாநிலத்தின் சுற்றுலா தல பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது, அம்மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு. இது தீவிர இந்துத்துவா அரசியலின் வெளிப்பாடு எனவும், மதத்துவேசத்தின் வெளிப்பாடு எனவும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

தாஜ்மஹாலை மட்டுமே அடையாளமாகக்கொண்டு இந்தியாவை அடையாளம் காணும் வெளிநாட்டவர்கள் இருக்கின்றனர். அதன் கட்டடக்கலை, அழகு, கம்பீரம் என எல்லாவற்றையும் கண்டு ரசிக்கவே லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருடந்தோறும் இங்கு வருகை தருகின்றனர். இங்கு அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைபுரிகின்றனர்.

இந்திய தொல்லியல் துறை கணக்கெடுப்பின்படி, கடந்த 2016-ஆம் ஆண்டைவிட (ஜனவரி-ஆகஸ்டு) (ஏ.எஸ்.ஐ.) 2017-ஆம் ஆண்டில் தாஜ்மஹாலுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் 4.26 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு 5.13 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்திருக்கின்றனர்.

அதிலுள்ள தகவல்களின்படி, இந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் அதிகபட்சமாக அமெரிக்கர்களும் (33,410), அதற்கடுத்த இடங்களில் இங்கிலாந்து (30,392), சீனா (28,712), ஃப்ரான்ஸ் (22,059), இலங்கை மற்றும் ஜப்பான் ஆகியவை இடம்பிடித்துள்ளன.

ஆனால், 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தாஜ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கின்றன. 2012-ஆம் ஆண்டில் 7.90 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைபுரிந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு 7.40 லட்சமாகவும், 2014-ஆம் ஆண்டு 6.94 லட்சமாகவும், 2015-ஆம் ஆண்டு 6.39 லட்சமாகவும் குறைந்துள்ளது.

அதேபோல், கடந்த 2016-ஆம் ஆண்டில் (ஜனவரி - ஆகஸ்டு) தாஜ்மஹாலுக்கு வருகைபுரிந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது இந்தாண்டு 3 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்தாண்டில் 37.49 லட்சம் உள்நாட்டு பயணிகள் வருகை தந்த நிலையில், இந்தாண்டு 36.30 லட்சம் பேர் மட்டுமே வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளாமை, பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஆகியவற்றால் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் எனவும், வருங்காலங்களில் எண்ணிக்கை உயரும் எனவும் துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment