Advertisment

வீடியோ: கன்னத்தில் ஓங்கி அறைந்த சக மாணவன்: காது கேட்கும் திறனை இழந்த பரிதாபம்

நொய்டாவில் பந்தயத்திற்காக பள்ளி மாணவரை சக மாணவர் கன்னத்தில் அறைந்ததால் அவர் கேட்கும் திறனை இழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ: கன்னத்தில் ஓங்கி அறைந்த சக மாணவன்: காது கேட்கும் திறனை இழந்த பரிதாபம்

நொய்டாவில் பந்தயத்திற்காக பள்ளி மாணவரை சக மாணவர் கன்னத்தில் அறைந்ததால் அவர் கேட்கும் திறனை இழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

டெல்லியில் உள்ள நொய்டாவில் உள்ள பாத்வேஸ் எனப்படும் பள்ளியில், ராஜ்வீர் என்ற மாணவரை சக மாணவர் கன்னத்தில் ஓங்கி அறந்ததால், அவர் கேட்கும் திறனை இழந்ததாக, பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மாணவர்களிடையே பந்தயத்திற்காக ராஜ்வீரை அறைந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில், அச்சம்பவம் முழுவதும் செல்ஃபோன் கேமராவில் வீடியோ எடுக்கப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இச்சம்பவத்திற்கு காரணமான மூன்று மாணவர்களை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தின் வீடியோவை பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அந்த வீடியோவில், பள்ளி கழிவறையில் மாணவர் ராஜ்வீரை சுற்றி சில மாணவர்கள் நிற்கின்றனர். சிலர் அங்கு நடப்பதை ரசித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் செல்ஃபோனில் வீடியோ எடுக்கின்றனர். இதையடுத்து, ராஜ்வீரை சக மாணவன் கன்னத்தில் ஓங்கி அறைகிறான். இதனால், அந்த மாணவருக்கு 25 சதவீதம் கேட்கும் திறன் இழந்ததாக, அந்த முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

இந்த வீடியோ வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவவே, அதனை பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் பார்த்துவிடுகின்றனர். இதையடுத்து அவர்கள் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் தங்களுக்கு ஏதும் தெரிவிக்கவில்லை எனவும், தங்கள் மகனுக்கு அவர்கள் முதலுதவியும் செய்யவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

Students Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment