Advertisment

மத்திய அமைச்சரவையில் 9 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

முன்னாள் அரசு மூத்த அதிகாரிகள் உள்பட புதிய அமைச்சர்கள் 9 பேர் இன்று மத்திய அமைச்சரவையில் இன்று பதவியேற்கவுள்ளனர்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
election 2019 live updates pm modi visit

election 2019 live updates pm modi visit : பிரதமர் மோடி தமிழகம் வருகை

முன்னாள் அரசு மூத்த அதிகாரிகள் உள்பட புதிய அமைச்சர்கள் 9 பேர் இன்று மத்திய அமைச்சரவையில் இன்று பதவியேற்கவுள்ளனர்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மொத்தம் 72 அமைச்சர்கள் இருந்த நிலையில், கோவா மாநில முதல்வராக பதவியேற்கும் வகையில் தனது பதவியை மனோகர் பாரிக்கர் ராஜினாமா செய்தார். அதேபோல், குடியரசுத் துணைத் தலைவராக தேர்வான வெங்கையா நாயுடுவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். மற்றொரு அமைச்சர் அனில் தவே காலமானார். இதையடுத்து, மூன்று காலியிடங்கள் மத்திய அமைச்சரவையில் ஏற்பட்டன. அவர்களிடம் இருந்த இலாக்காக்கள் வேறு சில அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன.

அதேசமயம், பாஜக மேலிட அறிவுறுத்தலின் பேரில், கல்ராஜ் மிஸ்ரா, சஞ்சீவ் குமார் பல்யான், பக்கன் சிங் குலஸ்தே உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதனால், மத்திய அமைச்சரவையில் 9 காலியிடங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து, கூடுதல் இலாக்ககளை கவனித்து வந்த அமைச்சர்களின் சுமையை குறைக்கும் பொருட்டும், காலியிடங்களை நிரப்பும் பொருட்டும் மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளவும், விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எதிர்வரவுள்ள கர்நாடகா, ஹிமாச்சலப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் இணைந்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சி மற்றும் பாஜக-வுடன் நெருக்கம் காட்டி வரும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவியில் இடமளிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இது உறுதிபடுத்தப்படவில்லை.

ஆனால், மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இடம் பெறுவது குறித்து எந்த தகவலும் வரவில்லை. அது தொடர்பான எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை. ஊடகங்கள் மூலம் மட்டுமே அது போன்ற தகவல்கள் எங்களுக்கு கிடைக்கிறது என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் அரசு மூத்த அதிகாரிகள் உள்பட புதிய அமைச்சர்கள் 9 பேர் மாற்றம் செய்யப்படவுள்ள மத்திய அமைச்சரவையில் இடம்பெறவுள்ளனர். இதற்கான பட்டியலில், அஸ்வினி குமார் சௌபே, வீரேந்திர குமார், சிவ் பிரதாப் சுக்லா, அனந்த் குமார் ஹெக்டே, ராஜ்குமார் சிங், ஹர்தீப் புரி, கஜேந்திர சிங் செகாவத், சத்ய பால் சிங், அல்போன்ஸ் கன்னன்தானம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், கேபினட் அந்தஸ்தில் பொறுப்பேற்கவுள்ளனரா? இணையமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனரா? கூடுதல் இலாக்காக்களை கவனித்து வந்தவர்களிடம் இருந்து பொறுப்புகள் பிரிக்கப்பட்டு வேறு சிலருக்கு கொடுத்து அமைச்சர்களாக அவர்களும் பொறுப்பேற்க உள்ளனரா? என்பது அவர்கள் பொறுபேற்கும் போது தான் தெரிய வரும்.

புதிய அமைச்சர்களாக பொறுபேற்கவுள்ள அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். இந்த விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Bjp Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment