Advertisment

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனைத்து கிரெடிட், டெபிட் கார்டுகளும் செல்லும்: ஐ.ஆர்.சி.டி.சி., விளக்கம்

அனைத்து வகையான கிரெடிட், டெபிட் கார்டுகளும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் பயன்படுத்த முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி., விளக்கம்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC, Train Ticket, Rail Ticket, ATM card, Debit card, Credit card,

அனைத்து வகையான கிரெடிட், டெபிட் கார்டுகளும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் பயன்படுத்த முடியும் என்றும், இது குறித்து முன்னதாக வெளியான தகவல் தவறானது என ஐ.ஆர்.சி.டி.சி., விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட சமயத்தின்போது, ரூ.20 என பிடித்தம் செய்யப்பட்ட சேவை கட்டணத்தை ஐ.ஆர்.சி.டி.சி. தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. ஐ.ஆர்.சி.டி-சின் இந்த நடவடிக்கைக்கு வங்கிகள் சில எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே, ரிசர்வ் வங்கி புதியதாக விதிமுறையை வகுத்தது. அதன்படி, ரூ.1000 வரையிலான டிக்கெட் தொகைக்கு 0.25 சதவீதமும், ரூ.2000 வரையிலான டிக்கெட் தொகைக்கு 0.5 சதவீதமும், ரூ.2000–க்கும் மேற்பட்ட டிக்கெட் தொகைக்கு 1 சதவீதமும் சேவை கட்டணம் என ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் வசூல் செய்யப்பட்டது.

கடந்த பிப்ரவரி புதிய விதிமுறைகள் மூலம், ரூ.1000 வரையினலான டிக்கெட் தொகைக்கு ரூ.5-ம், ரூ.2000 வரையிலான டிக்கெட் தொகைக்கு ரூ.10-ம், ரூ.2000–க்கும் மேற்பட்ட டிக்கெட் தொகைக்கு 0.5 சதவீதமும் சேவை கட்டணம் வசூல் செய்ய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.

இந்த கட்டணம் வசூலிப்பதில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துக்கும், வங்கிகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. இணையத்தளத்தில், சில வங்கிகளின் ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியானது.

இந்த நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு அனைத்து கிரெடிட், டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம் என ஐ.ஆர்.சி.சி விளக்கம் அளித்துள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட வங்கியின் டெபிட் கார்டுகளும் தடை செய்யப்படவில்லை. குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகள ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் தடை செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையேதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment