Advertisment

வலுக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்: அறிக்கை கேட்கிறார் உ.பி.,முதல்வர்

பனாரஸ் இந்து பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பிய மாணவியை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் மூன்று பேர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கினர்

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
வலுக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்: அறிக்கை கேட்கிறார் உ.பி.,முதல்வர்

மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதையடுத்து பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் வலுத்து வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளார்.

Advertisment

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மாணவி ஒருவர், கடந்த வியாழக்கிழமையன்று வெளியே சென்று விட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் மூன்று பேர் அப்பெண்ணை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கினர்.

இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் அப்பெண் முகார் அளித்துள்ளார். ஆனால், இந்த புகார் குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காமல், மாணவி தாமதமாக வந்ததற்கான காரணம் குறித்து விசாரித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக வாளகத்துக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் பல்கலைக்கழக துணை வேந்தர் கிரிஷ் சந்திரா திரிபாதியை, நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து, துணை வேந்தரின் வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது, மாணவர்களுக்கும், அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், ஏற்பட்டு கலவரத்தில் முடிந்தது. அங்கு ஏற்பட்ட கலவரத்தில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பெண் போலீசார் இல்லாததால், ஆண் போலீசாரே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை கலைத்தனர். அப்போது, மாணவிகளின் விடுதிக்குள் சென்றும் போலீசார் அவர்களை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு செல்ல முயன்ற அம் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்நிலையில், மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடயே, மாணவர்கள் போராட்டம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதியநாத் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Bjp Yogi Adityanath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment