Advertisment

புல்டோசர் கலாசாரம், கும்பல் கொலையால் பாதிக்கப்பட்ட அனைவரும் பசமாண்டா முஸ்லிம்கள்; அறிக்கை

அகில இந்திய பாஸ்மாண்டா முஸ்லீம் மஹாஸ் அமைப்பு சமூகத்தில் பின்தங்கிய நிலையை அடிக்கோடிட்டு காட்ட பீகார் சாதி கணக்கெடுப்பை குறிப்பிட்டு, பாதுகாப்பிற்கான சட்டங்களை நாடுகிறது; நிறுவனர்-எம்.பி அலி அன்வர் அன்சாரி எதிர்கட்சிகளின் "மௌனம்" குறித்து கேள்வி எழுப்புகிறார்

author-image
WebDesk
New Update
pasmanda muslim

புல்டோசர் கலாச்சாரம் (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Santosh Singh

Advertisment

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காகச் செயல்படும் அகில இந்திய பமாண்டா முஸ்லீம் மஹாஸ் (AIPMM) என்ற அமைப்பானது, பீகார் சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் செவ்வாயன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் கும்பல் படுகொலைக்கு எதிராக ஒரு கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றும், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக "புல்டோசர் கலாச்சாரத்தை" தடுக்க வேண்டும் என்றும் கோரும் அதே வேளையில், இதுபோன்ற இரண்டு அத்துமீறல்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் பசமாண்டா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியது.

ஆங்கிலத்தில் படிக்க: Almost all victims of mob lynching, ‘bulldozer culture’ are Pasmanda Muslims, says report

டெல்லியில் வெளியிடப்பட்ட அறிக்கை, பசமாண்டா முஸ்லிம்களின் மோசமான சமூக-பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு கோருகிறது.

பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க, பசமாண்டா முஸ்லிம்களை ஒரு மூலோபாய நடவடிக்கையில் ஈர்க்க முயற்சிக்கும் அதே வேளையில், பெரிய முஸ்லீம் சமூகமான பசமாண்டா சமூகம் பா.ஜ.க.,வுடன் அந்நியமாக இருப்பதால், AIPMM அறிக்கை பா.ஜ.க மற்றும் AIMIM கட்சி ஆகிய இரண்டையும் சமமாக விமர்சித்துள்ளது. "ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகியவற்றின் அரசியல் ஒன்றுக்கொன்று துணையாக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்" என்று அறிக்கை கூறுகிறது.

AIPMM அறிக்கை, ‘பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு 2022-2023 மற்றும் பசமாண்டா நிகழ்ச்சி நிரல்கூறுகிறது: கும்பலால் அடித்து கொலை மற்றும் அரசாங்க புல்டோசர்களின் அதிகப்படியான தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் பசமாண்டா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இதுபோன்ற சம்பவங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.”

"தனியார் துறைகளில் இடஒதுக்கீடு" என்ற கோரிக்கை உட்பட, 2024 மக்களவைத் தேர்தலுக்கான நிகழ்ச்சி நிரலையும் இந்த அறிக்கை அமைக்கிறது.

பா.ஜ.க மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகளை விமர்சித்து, முகமது அலி ஜின்னாவின் இரு மாநிலங்கள் மற்றும் வி.டி சாவர்க்கரின் ஹிந்து ராஷ்டிர பார்வை ஆகிய இரண்டிற்கும் எதிராக "எங்கள் முன்னோர்கள்" ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்ததாக அறிக்கை கூறுகிறது. "கடந்த 25 ஆண்டுகளாக பசமாண்டா மஹாஸ் அதே உணர்வோடு செயல்பட்டு வருகிறது" என்று அறிக்கை கூறுகிறது.

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பைக் குறிப்பிடுகையில், அறிக்கை கூறுகிறது: பசமாண்டா (EBC பிளஸ் OBC) முஸ்லிம்களில் 0.34 சதவீதம் பேர் மட்டுமே ஐ.டி.ஐ / டிப்ளோமா படித்துள்ளனர், 0.13 சதவீதம் பேர் மட்டுமே இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளனர், 2.55 விழுக்காட்டினர் மட்டுமே கலை / அறிவியல் / வணிகவியல் பட்டதாரிகள் மற்றும் 0.03 விழுக்காடு பசமாண்டா முஸ்லிம்கள் மட்டுமே பட்டயக் கணக்காளர் மற்றும் பிஎச்.டி பட்டங்களைப் பெற்றுள்ளனர்.”

கணினிகள், மடிக்கணினிகள் அல்லது வாகனங்கள் போன்ற உடைமைகள் எத்தனை பேரிடம் இருந்தாலும், பசமாண்டா முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. பசமாண்டா முஸ்லிம்களில் 99.10 விழுக்காட்டினரிடம் கணினிகள் அல்லது மடிக்கணினிகள் இல்லை, 0.62 விழுக்காடு முஸ்லிம்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஏறக்குறைய 96.47 பசமாண்டா முஸ்லிம்கள் எந்த வகையான வாகனங்களையும் கொண்டிருக்கவில்லை. அவர்களில் 3.10 சதவீதம் பேர் மட்டுமே இருசக்கர வாகனங்களை வைத்துள்ளனர்.”

அறிக்கை கூறுகிறது: 0.30 சதவீதம் ஓ.பி.சி மற்றும் ஈ.பி.சி முஸ்லிம்கள் மட்டுமே வெளி மாநிலங்களில் கல்வி கற்கிறார்கள், 1.30 சதவீதம் பேர் மட்டுமே மாநிலத்திற்கு வெளியே வேலை செய்கிறார்கள்சுமார் 30.3 சதவீத பசமாண்டா முஸ்லிம்களுக்கு மாத வருமானம் ரூ. 6,000 க்கும் குறைவாக உள்ளது. அவர்களில் 55 சதவீதம் பேர் ஓடுகள் வேயப்பட்ட அல்லது தகர கூரை வீடுகளில் வசிக்கின்றனர்.

மத்திய அரசின் கொள்கைகள் குறித்து, ஏ.ஐ.பி.எம்.எம் அறிக்கை தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை ஏன் நிறுத்துகிறது என்று கேட்கிறது. தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களுக்கு SC ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்றும், மேவாட்டி, பங்கூர்ஜார், மதரி, சபேரா போன்ற பல பழங்குடியினர் ST அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றும் அறிக்கை கோருகிறது.

முஸ்லீம்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்ட 38 துணைக் குழுக்களில், 28 பீகாரில் EBC களாக வகைப்படுத்தப்படுகின்றன, இது மாநில மக்கள் தொகையில் 10.57% ஆகும். சில முக்கிய EBC குழுக்களில் இத்ரிசி, இத்பரோஷ், கசாப், குல்ஹையா, சிக், சுடிஹார், தாக்குரை, டஃபாலி, துனியா, பமரியா, பக்கோ, மதரி, முகேரி, மெரியாசின், ஹலால்கோர் மற்றும் ஜுலாஹா/ அன்சாரி ஆகியோர் அடங்குவர்.

காடி, நல்பந்த், கலால்/ எராக்கி, ஜாட், மதரியா, சுர்ஜாபுரி மற்றும் மாலிக் உட்பட 7 ஓ.பி.சி முஸ்லீம் குழுக்கள் மக்கள் தொகையில் 2% ஆக உள்ளனர்.

மொத்தத்தில், பசமண்டாக்கள் மாநிலத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் 72.52% ஆக உள்ளனர்.

ஏ.ஐ.பி.எம்.எம் நிறுவனரும் முன்னாள் எம்.பி.,யுமான அலி அன்வர் அன்சாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது: பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை பீகாரில் உள்ள பசமாண்டா முஸ்லிம்களின் மோசமான சமூக-பொருளாதார மற்றும் கல்வி நிலையை ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது. நாடு தழுவிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், பசமாண்டா முஸ்லிம்கள் எப்படி, எங்கு வைக்கப்பட்டுள்ளனர், என்னென்ன திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

பசமாண்டா பிரச்சினைகளை பா.ஜ.க எப்படி முன்னிறுத்தப் போகிறது என்று அஞ்சி எதிர்க்கட்சிகள் பசமாண்டா விவகாரத்தை தவிர்க்கின்றன என்று தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய அன்சாரி மேலும் கூறினார்: அவர்கள் பசமாண்டா என்ற வார்த்தையைத் தவிர்க்கக் கூடாது. 80% முஸ்லிம் மக்கள் மீது மௌனம் காப்பது புத்திசாலித்தனம் அல்ல. பசமாண்டா என்பது 'சாதி' மற்றும் 'மத நடுநிலை' வார்த்தை... மதங்களை கடந்து தலித்துகள் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்கின்றனர். எதிர்க்கட்சிகளும் பசமாண்டா என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்தால், அவர்கள் மீது பா.ஜ.க திணிக்கும் முஸ்லீம் சமாதான முழக்கம் பொய்யாகிவிடும். பா.ஜ.க.,வைப் போல டோக்கனிசத்தைமட்டும் செய்யாமல், எதிர்க்கட்சிகள் உண்மையில் பசமாண்டாக்கள் அல்லது மிகவும் பின்தங்கிய இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு அரசாங்கத்திலும் நிர்வாகத்திலும் சரியான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும்.”

நெசவாளர்கள் மற்றும் பிற கைவினைஞர் சாதியினருக்கான பா.ஜ.க.,வின் விஸ்கர்மா யோஜனாதிட்டத்தை போல், எதிர்கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் சமூகத்திற்கான திட்டத்தை அறிவிக்கவும் அன்சாரி அறிவுறுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Muslim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment