Advertisment

தெலங்கானாவில் குவிந்த கர்நாடகா காங். தலைவர்கள்: சூடுபிடிக்கும் தேர்தல் களம்

அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், அடுத்து தெலங்கானாவில் காங்கிரஸ் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Tel ele.jpg

தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகா, தெலுங்கானாவில் நடக்கும் அரசியல் உரையாடல்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) சித்தராமையா அரசை தாக்கி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து எச்சரிக்கை விடுவது போல் பிரச்சாரம் செய்து வருகிறது. கர்நாடகா தேர்தல் வெற்றி காங்கிரஸிற்கு புது உற்சாகம் கொடுத்துள்ளது.  கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் நட்சத்திர பேச்சாளர்களை மாநிலத்தில் பிரச்சாரத்திற்கு அனுப்பியுள்ளது.

Advertisment

நவம்பர் 10-ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த காமரெட்டி தொகுதியில் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது, மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை விமர்சனம் செய்தார். தொடர்ந்து,  ஓபிசி குருபா சமூகத்தைச் சேர்ந்த சித்தராமையா, கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அறிவிப்பை வெளியிட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள், மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடுகளை 23%-லிருந்து 42%-ஆக உயர்த்தும் என்றும் கூறியுள்ளது. 

கர்நாடக பிரதேச காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார், தெலங்கானாவில் அம்மாநில தலைவர்களுடன் ரோடு ஷோமற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். 

கர்நாடகாவில் சித்தராமையா அரசாங்கத்தின் திட்டங்களை முன்னிலைப்படுத்த அக்கட்சியின் கர்நாடகத் தலைவர்கள் உதவுகிறார்கள், தெலுங்கானாவில் "மாதிரியைப் பிரதிபலிக்கும்" வாக்குறுதியுடன் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

"கர்நாடகாவில், காங்கிரஸ் தங்கள் செய்தியை திறம்பட பரப்ப முடிந்தது," மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறினார்.

சித்தராமையா மற்றும் சிவக்குமார் தவிர, 8 அமைச்சர்கள், 30 எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் தெலங்கானாவில் களத்தில் உள்ளனர். மொத்தமாக கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை 14 பேரணிகளில் உரையாற்றியுள்ளனர், அவர்களில் 30 பேர் வாக்குப்பதிவு நாளுக்கான தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில்,  “காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் பல கர்நாடக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முக்கிய தொகுதிகளில் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் காமரெட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேசினார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் ஐதராபாத்திலும், அமைச்சர்கள் எஸ்.பி.பாட்டீல், கே.எச்.முனியப்பா மற்றும் பலர் மற்ற தொகுதிகளிலும் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் செய்தது போல் காங்கிரஸ் 6 உத்தரவாதங்களுடன் மக்களைச் சென்றடைகிறது என்று சி.எல்.பி தலைவர் மல்லு பாட்டி விகாரமார்கா கூறினார். 

கர்நாடகாவில் அக்கட்சி வெற்றி பெற்றதில் இருந்து, தெலங்கானா காங்கிரஸ், அந்த வெற்றி அதன் அணிகளுக்கு மீண்டும் உற்சாகத்தை அளித்துள்ளது, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பி.ஆர்.எஸ் அரசுக்கு எதிராக எதிர்பலை உருவாகியுள்ளது என்று தெலங்கானா காங்கிரஸ் மறைமுகமாகக் கூறியுள்ளது.

இதற்கிடையில் பி.ஆர்.எஸ் கர்நாடக காங்கிரஸில் இருக்கும் பிளவுகளை முன்னிலைப்படுத்தி வருகிறது, அதே நேரத்தில் காங்கிரஸை  "ஸ்கேம்-கிரேஸ்" என்று அழைக்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற பேரணியில், கே.சி.ஆரின் மகளும், பி.ஆர்.எஸ் எம்.எல்.சியுமான கே.கவிதா, கர்நாடக அமைச்சர்கள் தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது பற்றி கூறுகையில், 

கர்நாடகாவில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் போராட்டங்கள் நடந்தப்படுவதாக கூறினார்.

கடந்த வாரம் வக்கீல்களுடனான மற்றொரு சந்திப்பில், அமைச்சர் கே.டி.ராமராவ் கூறுகையில், கர்நாடகாவில் 6 மாதங்களுக்கு ஒருமுறை முதல்வர்கள் மாறுவார்கள் என்று கூறினார். "சிவகுமார் தற்போது முதல்வர் பதவியை குறிவைத்துள்ளார், அடுத்து (காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன்) பிரியங்க் கார்கே நம்பிக்கையில் இருக்கிறார்," என்று அவர் கூறினார். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/telangana-assembly-elections-2023-congress-karnataka-9025645/

கடந்த மாதம், ஃபாக்ஸ்கான் குழுமத்தின் தலைவருக்கு சிவக்குமார் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் வெளிவந்ததைத் தொடர்ந்து ஒரு சலசலப்பு வெடித்தது. அதில் ஆப்பிள் ஏர்போட்ஸ் உற்பத்தி அலகு ஒன்றை ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகாவிற்கு மாற்றுமாறு நிறுவனத்தை வலியுறுத்தியதாக கூறப்பட்டது. 

"தெலங்கானாவில் இருந்து பெங்களூருக்கு தொழில்களை மாற்ற காங்கிரஸ் சதி செய்கிறது" என்று கேசிஆர் குற்றம் சாட்டினார். இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து தொழில்களும் கர்நாடகாவுக்கு சென்றுவிடும் என்று கூறி தாக்கினார்.

ஆனால் சிவக்குமார்  இந்த கடிதத்தை மறுத்தார். கடிதம் போலியானது என்றும், இது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Telangana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment