Advertisment

ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் வலியுறுத்தல்: அவை ஒத்திவைப்பு

குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல்கள் முடிந்த நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப திட்டமிட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் வலியுறுத்தல்: அவை ஒத்திவைப்பு

காலை 11.40:ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடர் பாதிப்பாக அரசு அறிவிக்க வேண்டும் என அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் மாநிலங்களவையில் வலியுறுத்தினார். இதனால், மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

காலை: 11:00 ”குளிர் முழுமையாக வராததால் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க தாமதமானது. புவி வெப்பமயமாதல் காரணமாக குளிர் காலத்தில் குளிர் முழுமையாக தென்படவில்லை”, என மக்களவையில் பிரதமர் உரையாற்றினார். அதன்பின், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட புதிய அமைச்சர்களை பிரதமர் மோடி வரவேற்றார். அதேபோல், மாநிலங்களவையில் துணை சபாநாயகர் இறந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல்கள் முடிந்த நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப திட்டமிட்டுள்ளன.

நாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (15ம் தேதி) தொடங்குகிறது. ஜனவரி 5ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் 14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. அதேசமயம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு, சரக்கு, சேவை வரியை அமல்படுத்தியதில் ஏற்பட்ட குறைபாடு, விவசாயிகள் பிரச்சினை, ரபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுக்க எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசு நேற்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாராளுமன்ற கூட்டத் தொடர் சுமுகமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் பாராளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நாட்டின் வளர்ச்சிக்கு அதிக ஊக்கம் அளிக்க முடியும் என்றும் அப்போது அவர் கூறினார். இந்த தகவலை கூட்டம் முடிந்ததும் பாராளுமன்ற விவகார மந்திரி அனந்தகுமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசியது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் தங்கள் கட்சி பிரச்சினை கிளப்பியதாக தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து, பாராளுமன்றத்தில் காங்கிரஸ் பிரச்சினையை கிளப்பும் என்றும், பிரதமர் வருத்தம் தெரிவிக்கும் வரை ஓயப்போவது இல்லை என்றும் அப்போது அவர் கூறினார்.முன்னதாக, பாராளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

Bjp Parliment Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment